புதன், 11 டிசம்பர், 2019

ஸ்டாலின் : குடியுரிமை சட்ட வரைவு ... அதிமுக கட்சியிலிருந்து அண்ணா பெயரை நீக்கிவிடலாம்.


Veerakumar - /tamil.oneindia.com/ சென்னை: அதிமுக கட்சியின் பெயரில் உள்ள அண்ணாவின் பெயரை நீக்கிவிடலாம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அதிமுக ஆதரவு வழங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார், ஸ்டாலின்.
குடியுரிமையை மதத்துடன் இணைப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 என்பது மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் மீதான நேரடித் தாக்குதல் - எந்தவொரு ஜனநாயகத்திற்கும் அவசியமான கொள்கைகள்
CitizenshipAmmendmentBill2019-க்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், லோக்சபாவில் குடியுரிமை சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு அதிருப்தி வெளிப்படுத்திய ஸ்டாலின், அந்த செய்திகள் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தினார்.

கருத்துகள் இல்லை: