நக்கீரன் :
தமிழகத்தில்
இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில
தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக
உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை
என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர
மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்தது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, வேட்பாளர் பட்டியலை
அ.தி.மு.க.தான் முதலில் தயார் செய்து வருவதாக கூறுகின்றனர். மேலும்
அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று அவங்க தொகுதியில்
யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்ற ஒரு லிஸ்ட்டை ரெடி செய்துள்ளார்கள்.
குறிப்பாக அமைச்சர்களே குறிப்பிட்ட நபர்களுக்கு தான் சீட் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் அனுப்பியுள்ளார்கள். அதை எல்லாம் பார்த்துத் தொகுத்து, ஒரு அப்ராக்ஸிமேட் லிஸ்ட்டை அ.தி.மு.க. தலைமை ரெடி செய்துள்ளது என்கின்றனர். இதைக் கையில் வைத்து கொண்டு தான் கூட்டணிக் கட்சிகளோட, சீட் ஷேரிங் குறித்துப் பேசணும் என்ற முடிவில் அ.தி.மு.க. தலைமை இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க, பாஜக கூட்டணியில் உரசல்கள் அதிகமாகி வருவதால்,
அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என்று பா.ஜ.க.விடம் பா.ம.க. வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
பா.ஜ.க.வும், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க.வோடும், அதற்குள் ரஜினி கட்சியைத் தொடங்கிவிட்டால் அவரோடும் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி, அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் ஒருசேர ஓரம் கட்ட வேண்டும் என்று ஃபார்முலாக்களை வகுத்து வருவதாக கூறுகின்றனர். இதனால் பா.ஜ.க.வும் பா.ம.க.வும் தற்போது இருந்தே அ.தி.மு.க.வுக்கு எதிராகக் கைகோத்துக்கொண்டு புதிய வியூகங்களை வகுக்க தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக