புதன், 11 டிசம்பர், 2019

ராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த வரைவு . ஆதரவு 125, எதிர்த்து 105 ஓட்டுக்கள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பாராளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் தோல்விtamil.oneindia.com : டெல்லி: லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் வாக்களித்தனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.
இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், சமணர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்த மசோதா கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.


ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 102 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் அங்கு மசோதாவை நிறைவேற்ற 120 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 245 இடங்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய முழு பலம் 238 ஆகும். இதனால் பாஜக தனது மசோதாவை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் அதிமுக கட்சி மசோதாவை ஆதரவு அளித்து வாக்களிக்க முடிவு செய்துள்ளது.

மொத்தம் அதிமுகவிற்கு 11 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர். தீவிர விவாதங்களுக்கு பிறகு, இரவு 8.15 மணியளவில் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவில் எதிர்க்கட்சிகள் சார்பில், கொண்டுவரப்பட்ட சில திருத்தங்கள் ஏற்கப்பட்டன. பல திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து டிவிஷன்  முறையில், மசோதா மீது வாக்கெடுப்பு துவங்கியது.

 அதில், மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. முன்னதாக சிவசேனா வெளிநடப்பு செய்தது. இது பாஜகவுக்கு ஆதரவான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இதனால், இந்த சட்டம் நிறைவேறியுள்ளது. இரு அவைகளும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதும், சட்டம் நடைமுறைக்கு வரும்


மாலைமலர் : குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது இன்றிரவு மாநிலங்களவையில் காரசாரமான விவாதம் நடைபெறும் நிலையில் இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வியடைந்தது.
 புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் இன்றிரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பு கூடாது என 124 எம்.பி.க்களும் அனுப்ப வேண்டும் என 99 எம்.பி.க்களும் வாக்களித்திருந்ததால் 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது

கருத்துகள் இல்லை: