மாலைமலர் : டெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு !
விபத்து ஏற்பட்ட பகுதி புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்நிலையில். தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லியில் அதிகாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து மிகவும் கொடூரமானது. தீயில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக