வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்... ...


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்?...zeenews.india.com :காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில் சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐ.நா சபையை கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில் சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐ.நா சபையை கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் வேண்டுகோளின் பேரில் காஷ்மீரின் நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்புக் குழு (UNSC) வெள்ளிக்கிழமை ரகசிய ஆலோசனைகளை நடத்துகிறது. பாகிஸ்தான் எழுதிய கடிதம் அடிப்படையில் சீனா இந்த முறைசாரா சந்திப்பைக் கோரியுள்ளது.

இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் UNSC உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். சந்திப்பின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் ஒளிபரப்பப்படாது அல்லது பொதுமக்கள் அணுக இயலாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவைத் தவிர, UNSC-யின் மற்ற நான்கு நிரந்தர உறுப்பினர்கள் (பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் இருதரப்பு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கின்றன.
முன்னதாக பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.குரேஷி, UNSC-யின் தலைவர், போலந்து தூதர் ஜோனா வ்ரோனெக்காவுக்கு காஷ்மீர் விவகாரம் குறித்த மத்திய அரசின் முடிவு குறித்து கடிதம் எழுதியிருந்தார்.
இதுகுறித்து எக்குவடோரியல் கினியாவின் நிரந்தர பிரதிநிதி அனடோலியோ என்டோங் எம்பா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் "காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாக்கிஸ்தான் ஒரு கூட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது, ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையினை ஏற்பது தொடர்பாக நாங்கள் சபையின் தலைவரின் அறிவுறுத்தலைப் பெற வேண்டும். அவர் இப்போது ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரம், பாகிஸ்தான் எழுதிய கடிதம் ஐ.நா.எஸ்.சி கூட்டங்களில் எதுவும் எடுக்கப்படவில்லை.
எனினும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் குரேஷி ஆகியோரிடமிருந்து அழைப்பைப் பெற்ற போலந்து வெளியுறவு அமைச்சர் ஜேசெக் ஸாபுடோவிச் இச்சந்திப்பிற்கு பின்னர் தெரிவிக்கையில் "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய பதட்டங்கள் குறித்து நாங்கள் கவலை தெரிவித்தோம் ... பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சந்திப்பிற்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ளுங்கள். இரு நாடுகளும் பரஸ்பர நன்மை பயக்கும் தீர்வை இருதரப்பு ரீதியாக உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்." என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: