ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

நீங்கள் முன்னுக்கு வர, என்னைப் பின்னுக்குத் தள்ளாதீர்' - கனிமொழி டென்ஷன்

கனிமொழிvikatan.com - கழுகார் : ஊர்வலம் தொடங்கும் வரை ஸ்டாலின் பின்னால் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும், ஊர்வலம் கிளம்பியதும் உதயநிதியின் பின்னால் முண்டியடித்துக்கொண்டு நின்றார்கள். கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், சீனியர்கள் பலருக்கும் சங்கடமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
உண்மைதான்... மம்தாவை வரவேற்பதிலேயே வருத்தங்கள் ஆரம்பித்துவிட்டன. மூத்த தலைவர்களை அனுப்பாமல், பொன்முடியோடு உதயநிதியை அனுப்பிவைத்தார் ஸ்டாலின். வரவேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் டெல்லியில் கனிமொழி கிளம்பத் தயாரானபோது, 'நீங்கள் இதற்காகக் கிளம்பி வரவேண்டாம்' என்று சென்னையிலிருந்து உத்தரவு போனதாம். அதில் கனிமொழி ரொம்பவே அப்செட் என்கிறார்கள். https://bit.ly/2Tl9c3b

நினைவுநாளன்று அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஸ்டாலினுடன் கனிமொழியும் சேர்ந்து நடந்துவந்தார். அவரைத் தள்ளிக்கொண்டு ஸ்டாலின் பக்கத்தில் வர முயன்றிருக்கிறார் பெண் நிர்வாகி ஒருவர். ஒருகட்டத்தில் கனிமொழி டென்ஷனாகி, 'நீங்கள் முன்னுக்கு வர, என்னைப் பின்னுக்குத் தள்ளாதீர்கள்' என்று கடுப்பாகச் சொல்லிவிட்டாராம்.
சால்வை அணிவிக்கும் வைபவத்தின்போது கனிமொழியைத் தேடினார் மம்தா பானர்ஜி.
அதே ஊர்வலத்தில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி பின்னால் நடந்துவந்தார். ஊர்வலம் தொடங்கும் வரை ஸ்டாலின் பின்னால் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும், ஊர்வலம் கிளம்பியதும் உதயநிதியின் பின்னால் முண்டியடித்துக்கொண்டு நின்றார்கள்.

ஊர்வலம் நினைவிடத்தை அடைந்தபோது உதயநிதி கொஞ்சம் பின்தங்கியே வந்தார். தலைவர் அஞ்சலி செலுத்திய பிறகு தனியாக தன் பரிவாரங்களுடன் அஞ்சலி செலுத்தவே இந்த முன்னேற்பாடு. உதயநிதி அஞ்சலி செலுத்துவதற்காக மலர்வளையத்துடன் காத்திருந்தார்கள் அவருடைய ஆதரவாளர்கள். கனிமொழியும் தன் குடும்பத்தினருடன் தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு இதே நினைவிடத்தில்வைத்து குரல்கொடுத்த மு.க.அழகிரி, எந்தச் சத்தமும் இல்லாமல் தன் குடும்பத்தினருடன் வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்.


'நீங்கள் முன்னுக்கு வர, என்னைப் பின்னுக்குத் தள்ளாதீர்' - கனிமொழி டென்ஷன்

காஷ்மீர் பிரச்னை காரணமாக ஃபரூக் அப்துல்லாவால் பொதுக்கூட்டத்துக்கு வர முடியவில்லை. சென்னை வந்த மம்தா, அவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். பொதுக்கூட்டத்தின் முன்வரிசையில் கருணாநிதியின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். அதில் துர்கா மட்டும் மிஸ்ஸிங். கனிமொழி, மேடையில் மிஸ்ஸிங். சால்வை அணிவிக்கும் வைபவத்தின்போது கனிமொழியைத் தேடினார் மம்தா பானர்ஜி. அவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருக்க, தேடிப்பிடித்து அவருக்கு சால்வை வழங்கினார் மம்தா. உடன் இருந்த செல்விக்கும் ஒரு சால்வை கொடுத்து மகிழ்ந்தா

கருத்துகள் இல்லை: