திங்கள், 12 ஆகஸ்ட், 2019

பா.சிதம்பரம் : நான் எச்சரிக்கிறேன், பா.ஜ.க இந்தியாவின் அரசியல் சாசனத்தை மாற்றும் வீடியோ


Babu K : பா.ஜ.க நிச்சயம் அரசியல்சாசனத்தை மாற்றும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
‘வரலாறு தெரியாதவர்கள் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்துவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் பா.ஜ.கவிற்கு தலைவர்கள் என்று யாரும் இல்லை. அதனால்தான் காங்கிரஸ் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலைத் திருடிக்கொண்டார்கள்.
370 a முதல் 370 j வரை மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மட்டும் பா.ஜ.கவிற்கு தெரிகிறதா?
காஷ்மீர் இந்துக்கள் பெரும்பான்மை மாநிலமாக இருந்திருந்தால் பா.ஜ.க இப்படி நடந்து கொண்டிருக்காது. மத வெறியால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் பா.ஜ.க இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது அரசியல் ஒழுங்கா ? அரசியல் ஒழுங்கை மீறினால் என்றாவது ஒருநாள் மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும்.


இந்திய ஊடகங்கள் காஷ்மீர் பிரச்னைகள் குறித்து பேசவில்லை என்றால் அங்கு பிரச்னை இல்லை என்று அர்த்தமா ? காஷ்மீர் இன்றும் பதட்டத்துடன்தான் இருக்கிறது. காஷ்மீரை கலைத்தது போல் தமிழ்நாட்டை யூனியன் பிரதேசமாக மாற்றினால் சும்மா இருப்பீர்களா..? அ.தி.மு.க அதற்கு சம்மதிக்கும். சட்டத்தைப் படிக்காமலே அ.தி.மு.க எல்லாவற்றிக்கும் ஆதரவு கொடுக்கிறது.
நான் எச்சரிக்கிறேன், பா.ஜ.க இந்தியாவின் அரசியல் சாசனத்தை மாற்றும்.

கருத்துகள் இல்லை: