செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் ஏற்றுகொள்ளவில்லை ?

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சா முஹம்மத் குரேஷி, குல்பூஷண் ஜாதவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிய இந்தியாவின் கோரிக்கையை, சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இது, பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், இந்த வழக்கில் யாருக்குத்தான் வெற்றி?
குல்பூஷன் ஜாதவ்vikatan.com - Vikatan 0ஜெ.பிரகாஷ் : இந்தியக் கப்பல் படையில் பணியாற்றிய ஜாதவ் தனது ஓய்வுக்குப் பிறகு, இரானிலிருந்து தொழில் செய்துவருவதாகவும் அவரைப் பிடித்து போலியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய உளவாளியாக பாகிஸ்தான் சித்திரித்து வருவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் ஜூலை 17, 2019 தீர்ப்பு வழங்கியதை இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால், இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதுதான்.
இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை, பிரதமர் மோடி வரவேற்றிருந்தார். தனது ட்விட்டர் பதிவில், "இந்த வழக்கில் உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் உண்மைகளை விரிவாக ஆய்வுசெய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்துக்கு வாழ்த்துகள் என்றும் குல்பூஷண் ஜாதவ்விற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்'' என்றும் மோடி தெரிவித்திருந்தார். "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி" என்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
ஜாதவ்வின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தான் பேசியதாகவும் அவர்களது உறுதிக்குப் பாராட்டுத் தெரிவித்ததாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சா முஹம்மத் குரேஷி, குல்பூஷண் ஜாதவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிய இந்தியாவின் கோரிக்கையை, சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இது, பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில், இந்த வழக்கில் யாருக்குத்தான் வெற்றி?
ஒரு தீர்ப்பை இரண்டு நாடுகளும் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கூறிக்கொண்டு கொண்டாடி வருவது வரலாற்று முரண் நகை. யார் இந்த குல்பூஷண் ஜாதவ்?<
மும்பை போவாய் பகுதியைச் சார்ந்த பூஷண் ஜாதவ்வின் தந்தை காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். ஜாதவ் 1987-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் இந்தியக் கப்பல் படையில் 1996-ம் ஆண்டு கமாண்டராகப் பதவியேற்றுக்கொண்டார். 2001-ம் ஆண்டு பதவி விலகியவர், இரானில் பிசினஸ் செய்துவருவதாக இந்தியா கூறிவருகிறது. ஆனால், ஜாதவ் இந்திய உளவு அமைப்பான `ரா’வில் நுண்ணறிவுப் பிரிவில் 2003-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதாகவும், பாகிஸ்தானை ஒட்டிய இரானில் உள்ள சப்பாரில் ஒரு சிறிய வணிக நிறுவனத்தைத் தொடங்கி கராச்சி மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளுக்கு அவர் அடிக்கடி சென்றுவந்ததாகவும் கூறுகிறது. உசைன் முபாரக் பட்டேல் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டுடன் நடமாடி வந்ததாகவும் பாகிஸ்தான் வாதிடுகிறது.
பலுசிஸ்தானில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளுக்கு அவர் உதவிகள் செய்ததோடு, கராச்சி மற்றும் சில நகரங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இந்தியா மறுத்துள்ளது. இந்தியக் கப்பல் படையில் பணியாற்றிய ஜாதவ் தனது ஓய்வுக்குப் பிறகு, இரானிலிருந்து தொழில் செய்துவருவதாகவும் அவரைப் பிடித்து போலியான ஆவணங்களைத் தயாரித்து இந்திய உளவாளியாக பாகிஸ்தான் சித்திரித்து வருவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
> குல்பூஷண் ஜாதவ்... ஒரு ஃப்ளாஷ்பேக்!t;/
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், அங்கு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி குல்பூஷண் ஜாதவை 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தான் அரசு கைதுசெய்தது. ஜாதவ் இந்தியாவின் உளவு அமைப்பான ராவின் உளவாளி என்றும், பலுசிஸ்தான் பகுதியில் பிரிவினைவாதத்தைத் தூண்டியதாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அவருக்கு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தி ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தை 2017-ம் ஆண்டு 8-ம் தேதி மனுசெய்தது, இந்தியா. அதற்கடுத்த நாள் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, இரண்டு நாடுகளும் தங்களது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே ஜூன் 22-ம் தேதி ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்திடம் கருணை மனுவைச் சமர்ப்பித்தார். அதில், பலுசிஸ்தான் பகுதியில் தாம் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதை, பாகிஸ்தான் வற்புறுத்தி எழுதி வாங்கியதாகக் கூறிய இந்தியா, ஜாதவ் அவரின் குடும்பத்தினரைப் பார்க்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தது. பின்னர், 2017-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி பாகிஸ்தான், ஜாதவ்வை அவரின் அம்மா மற்றும் மனைவியைச் சந்திக்க அனுமதி அளித்திருந்தது. பின்னர், சர்வதேச நீதிமன்றம் இந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல் நான்கு நாள்களாக இரு நாடுகளின் வாதங்களைக் கேட்டறிந்தது. அதன் பின்னர், ஜூலை 17-ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. ஜாதவ்வுக்கு வழங்கிய மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்று இந்தியா கூறுவது ஏன்...?

சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. இதைக் கருத்தில்கொண்டுள்ள சர்வதேச நீதிமன்றம், இந்திய தரப்பு வாதத்தை நன்கு பரிசீலித்து ஆறு முக்கியமான விஷயங்களின் அடிப்படையில், தற்போது இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தூதரக உறவுகளை மீறும் விதத்தில் நடந்துகொண்டுள்ளதாகவும், உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த நடைமுறை, வழக்குக்குப் பொருந்தாது என்று பாகிஸ்தான் கூறிவந்ததைச் சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. <
கைதுசெய்யப்பட்ட ஒருவர் தனக்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமையுள்ளது என்ற அடிப்படையில், அதை ஜாதவ்விற்கு வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் குடிமகன் கைது செய்யப்பட்டபோது உடனடியாக இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஜாதவ் கைதுசெய்யப்பட்டவுடன் அவருக்குரிய உரிமைகள் குறித்து விவரிக்காமல் அவரை ராணுவ விசாரணைக்கு உட்படுத்தியது தவறு என்றும், சர்வதேச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முக்கியமான அம்சங்களின் அடிப்படையில், ஜாதவ்வின் மரண தண்டனையை நிறுத்திவைக்குமாறும், புதிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இது, இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்தியா கூறிவருகிறது. ஆனால், அதே நேரத்தில் இது ஓர் இடைக்கால நிவாரணமே தவிர, முழுமையாக ஜாதவ் இந்த வழக்கிலிருந்து விடுதலை பெறவில்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணரவேண்டும். அவரை மீட்பதற்குச் சட்ட நடைமுறைகள் மட்டுமல்லாமல், அரசு ரீதியிலான பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். அதேநேரத்தில், இந்தியக் குடிமகனை மீட்க இந்தியாவுக்கு உள்ள உரிமைகளை பாகிஸ்தான் அரசு உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அதைமீறி, பாகிஸ்தான் வேறு மாதிரியான நடவடிக்கையில் இறங்கினால், அது இருநாடுகளின் உறவை மேலும் மோசமடையச் செய்யும். ஜாதவ் தற்போது பாகிஸ்தான் சிறையில்தான் இருக்கிறார். இந்தத் தீர்ப்பை இரு நாடுகளும் கொண்டாடினாலும் அவரது எதிர்காலம் என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.



குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினர்







குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினர்
சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பாகிஸ்தான், ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளையும் மரண தண்டனையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதோடு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவிகள் அவருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. வியன்னா ஒப்பந்தம் 36 1பி பிரிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள தூதரக உதவிகளை பாகிஸ்தான் அரசு மீறியுள்ளதாகச் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



பாகிஸ்தான் தரப்பில், சாதாரண குடிமகனுக்கு மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் பொருந்தும் என்றும் ஜாதவ் உளவுவேலையில் ஈடுபட்டதால் இது பொருந்தாது என்றும் கூறிவந்தது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் இதை ஏற்காதது பாகிஸ்தானுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஜாதவ்வை மரண தண்டனையிலிருந்து முழுவதுமாக மீட்டு மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவது என்பது சவால்நிறைந்த நடவடிக்கையாகும். இந்தச் சவாலை இந்தியா எப்படிச் சட்டரீதியாகவும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவும் நடத்தப்போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேவேளையில், சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாகிஸ்தானுக்குக் கிடைத்த வெற்றி என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முஹம்மத் குரேஷி தெரிவித்துள்ளதன் பின்னணியைப் பார்க்க வேண்டியுள்ளது. தூதரக உதவி, மரண தண்டனை மறுபரிசீலனை போன்றவற்றை சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தாலும், வழக்கு மற்றும் பாகி்ஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்வது போன்ற இந்தியாவின் கோரிக்கைகளைச் சர்வதேச நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதே குரேஷியின் குஷிக்குக் காரணம். <
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தானில் உள்ள சட்டப்படி ஜாதவ் மீதான வழக்கு தொடரும் என்று அறிவித்துள்ளது. ஜாதவ் முறையான விசா இல்லாமல் போலியான பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், உளவு வேலைகளில் கவனம் செலுத்திவந்தார். ஜாதவ் பின்னணியாக இருந்து செயல்பட்ட நடவடிக்கைகளில் பல பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இப்படியாக ஜாதவ் வழக்கு இடியாப்பச் சிக்கலாகியிருக்கிறது. ஜாதவ் மீதான குற்றச்சாட்டு மற்றும் மரண தண்டனையின் வாயிலாக, பாகிஸ்தானில் தீவிரவாதத்தை, பிரிவினைவாதத்தை இந்தியா தூண்டிவருகிறது என்ற செய்தியைச் சர்வதேச சமூகத்துக்குக் கொண்டுசெல்ல பாகிஸ்தான் முயன்றுவருகிறது. ஒரு சாதாரண குடிமகனைத் தீவிரவாதியாக பாகிஸ்தான் போலியாகச் சித்திரித்து இந்தியாவுக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்று வருகிறது என்று இந்த வழக்கை இந்தியா கொண்டுபோகிறது. இந்தப் போக்கில்தான் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தங்களுக்குக் கிடைத்த சாதகமான தீர்ப்பு என்று கூறிவருகின்றன.</>
உண்மையைச் சொல்வதென்றால், இதில் இரு நாடுகளுக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்ற விதத்தில்தான் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஆனால், இரு நாட்டு அரசுகளும், இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுவதன் பின்னணியில் அப்பட்டமான அரசியல் இருப்பதை இரு நாட்டு மக்களுக்கும் புரியுமா என்பது தெரியவில்லை. இல்லையென்றால், மீண்டும் சர்வதேச நீதிமன்றம் செல்வோம் என்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இதுகுறித்து இந்தியா பிரச்னை எழுப்பும் என்றும் கூறுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு சமாதான முயற்சியே தவிர, உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவுபோட முடியாது. சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியும் உள்ளன. ஆனால், தற்போதுள்ள சூழலில் மற்ற நாடுகள் ஏதேனும் நினைக்கக்கூடும் என்ற விதத்தில்தான் பாகிஸ்தான் செயல்படுகிறது.







பாக். காட்டிய புகைப்படம்; நிராகரித்த நீதிமன்றம் - குல்பூஷன் வழக்கு பற்றி  இந்திய வழக்கறிஞர்
நாடுகளுக்கு இடையிலான அரசியலில் ஒருவரின் உயிர் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அவரின் எதிர்காலம் புதிராவதும் புத்துயிர் பெறுவதும் இப்போதைக்கு இம்ரானின் கையில் இருக்கிறது. ஜாதவ் ஒருநாள், நிச்சயமாக வீட்டுக்குத் திரும்பிவருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது அவரின் குடும்பம். இந்தத் தேசமும்தான்.
–ஸ்ரீகுமார்

கருத்துகள் இல்லை: