மாலைமலர் :கோவையில்
நடைபெற்ற ஈஷா நவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் ஆகியோர் நடனம் ஆடியிருக்கிறார்கள். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, 25-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழா ஆதியோகி சிலை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரி பியூஸ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், நாகராஜன் எம்.பி., ஜனாதிபதியின் மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவேதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் ராணா, நடிகைகள் சுஹாசினி, இந்தி நடிகை சுகி சாவ்லா, தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மாலை 4 மணியளவில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர். பின்னர் 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர். இரவில் மகா சிவராத்திரி விழாவின்போது சத்குரு நடனமாடிய போது தமன்னா, காஜல் அகர்வால் உள்பட நடிகர், நடிகைகள் மற்றும் அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நடனமாடினர். விழாவில் பாடகர்கள் கார்த்திக், ஹரிகரன் கலந்து கொண்டு பாடினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக