திங்கள், 4 மார்ச், 2019

90ml ... இதுவரை தமிழ் சினிமா பூசி வந்த... முற்றிலுமாக .. ஓவியாவுக்கும் பெண்கள் குழுவிற்கும் பாராட்டுக்கள்


Karthikeyan Fastura : 90ml படத்தை பற்றிய ரசிகர்களின் ரிவ்யு பார்த்துவிட்டு தான்
அவ்ளோ மோசமா என்ன என்று தான் சென்றேன்.
உண்மையில் எனக்கு அது கலாச்சார அதிர்ச்சியோ இல்ல உடல் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாகவோ, போதை வஸ்துக்களை போற்றுவதுவாகவோ இல்லை. நேர்மையான படைப்பாக தான் பார்க்கிறேன்.
இவ்வளவு நாளாக தமிழ் சினிமா பூசி வந்த கலாச்சார கதைகளை இது முற்றிலுமாக புறந்தள்ளுகிறது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே பெண்களின் நட்பு பட்டறை துவங்குகிறது. அவர்களது முதல் Get together ஒரு தண்ணியடிக்கும் பார்ட்டியாக மாறுகிறது. அதற்கு ஒரு டைட்டில் வருகிறது. முதல் ரவுன்ட்.
அந்த ரவுண்டில் தங்கள் மனத்தடையை உடைக்க ஒரு வினையூக்கியாக மது இருக்கிறது. செக்ஸ் பற்றி பேச்சு வருகிறது. முற்றிலுமாக அவர்கள் உடைத்து பேசவில்லை என்றாலும் அதில் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பிரச்சனையை அதாவது யாரிடமும் பேசத் தயங்கும் பிரச்சனையை பேச தொடங்குகிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு அடுத்த ரவுண்ட் வருகிறது. அதில் ஒரு பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் என்ன என்று தோன்றுகிறது. தில்லாக மோதுகிறார்கள். வெல்கிறார்கள். அவர்களுக்கே அதிர்ச்சியை கொடுக்கும் ஒரு பெரும் சமூக மனத்தடையை அவர்களுக்குள் உடைத்துக்கொள்கிறார்கள். அத்துடன் இடைவேளை விடப்படுகிறது. உண்மையில் அது நல்ல ட்விஸ்ட். படத்தின் நேர்மையே அந்த இடத்தில் தான் பிடிபட்டது.
அதற்கடுத்து ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரொரு பிரச்சனை. அதை தைரியமாக முன் வைக்கிறார்கள். தீர்வும் காண்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் உண்மையில் இவர்களின் தவறும் சேர்த்து அலசப்படுகிறது. அதற்கு சரியான தீர்வையும் கண்டுகொள்கிறார்கள்.
ஓவியா முறை வருகிறது. அவரது பார்ட்னருக்கும் இவருக்கும் Living Together வாழ்கையில் கருத்து வேற்றுமை வருகிறது. பிரிந்துவிடுகிறார்கள். அதில் ஓவியா தன் முடிவை சரி என்று நியாயப்படுத்தவும் இல்லை, தவறு என்று குற்ற உணர்ச்சி கொள்ளவும் இல்லை. எனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. நான் வாழ்கிறேன். எனக்கு இது தான் மகிழ்ச்சி என்கிறார். அதுமாதிரி ஒருவன் கிடைத்தால் அவனுடன் வாழ்ந்துகொள்கிறேன் என்கிறார். அவ்வாறே கிடைத்து வாழ்வதாக மகிழ்ச்சியாக கதை முடிகிறது.
படம் ரெம்ப Slow என்பதை தாண்டி படத்தில் எந்த இடத்திலும் குற்றம் சொல்ல முடியாது.
ஓவியா மது அருந்துகிறார் எப்போதும் அல்ல நண்பர்களுடன் சேரும்போது மட்டும். அதையும் தெளிவாக படத்தில் இருமுறை குறிப்பிடுகிறார்கள். தம் அடிக்கிறார். அதுவும் அவ்வாறே. ஒருநாள் Extremeக்கு சென்று கஞ்சா முயற்சிக்கிறார்கள். அதில் உள்ள Riskம் காட்டப்படுகிறது. அதே போல Freak out ஆக வாழும்போது உள்ள பாதுகாப்பு குறைபாடுகளையும் காண்பிக்கிறார்கள். பிறகு ஒருநாள் ஒவியாவே சொல்லிவிடுகிறார் எனக்கு இப்ப Health consciousness வந்துடுச்சு. இப்போ தம்மு தண்ணி எல்லாம் விட்டுட்டேன் என்கிறார். அவ்வளவு தான். இதற்கு மேல என்ன வேண்டும். இதை ஆண்கள் சொன்னா கேட்டுக்கொள்கிறோம் இல்ல. அப்போ இதையும் கேட்டுக்கலாம். சிம்பிள்.
ஆண்கள் பார்வையில் கிளாசிக் என்று சொல்லப்படும் எத்தனையோ படங்களில் ஹீரோக்கள் எல்லா அட்டுழியத்தையும் பண்ணிட்டு அதை தவறென்றே காட்டாமல் இயல்பு என்று காட்டும்போது சில்லறைய வீசிவிட்டு இப்போ பெண்கள் அதையே செய்வதாக காட்ட தொடங்கினால் தையாதக்கான்னு குதிப்பது பச்ச அயோக்கியத்தனம்.
ஓவியா மற்றும் அந்த ஒட்டுமொத்த பெண்கள் குழுவிற்கும் பாராட்டுக்கள். இது ரெம்ப பாசிட்டிவான படமாக தான் நான் பார்க்கிறேன். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
நான் பார்த்த தமிழ் சினிமாவில் முதன் முறையாக லிப்லாக் சீன்கள் எல்லாம் அசலாக எடுக்கப்பட்டிருக்கிறது. சும்மா ஒத்தடம் கொடுக்கிற மாதிரி இல்லாமல் நேர்மையாக கொடுத்திருக்கிறார். அதற்காகவே ஓவியாவிற்கு சிறப்பு பாராட்டுக்கள்.
எனக்கு பிடிச்சிருக்கு.

கருத்துகள் இல்லை: