தினத்தந்தி : வாஷிங்டன்,
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது இல்லை என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேபோல், துருக்கிக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக சலுகையையும் பறிக்க உள்ளது. டொனால்டு டிரம்ப் உத்தரவின் படி, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக அமெரிக்க வர்த்த அலுவலக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது<

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக