tamilnews 18 : பொள்ளாச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு
செய்து வீடியோ எடுத்த வழக்கில், தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசை போலீசார்
கைது செய்துள்ளனர்.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி,
அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்யும் ஒரு கும்பலே
செயல்பட்டு வந்துள்ளது.
வீடியோவை காட்டி மிரட்டி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டுவதே அந்த கும்பலின் வாடிக்கை. இதுதொடர்பாக 19 வயது மாணவி ஒருவர் புகார் அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது.
இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபரான திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இன்று ஆஜராக உள்ளதாகவும் திருநாவுக்கரசு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் திருப்பதியிலிருந்து கார் மூலம் பொள்ளாச்சி வநத அவரை, மாக்கினாம்பட்டி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், இன்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக