சங்கத்தில்
தான் நீக்கப்பட்டதாகவும், தமிழில் ‘96’ திரைப்படம்தான் தனது கடைசி படம் என தெரிகிறது என்றும் சின்மயி ட்விட் செய்துள்ளார். தனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியிருப்பதாகவும் சின்மயி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
விகடன் : அலாவுதின் ஹுசைன் > பிரபல பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் ஆர்ட்டிஸ்ட் சின்மயி. சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த '96 படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் நாயகி பாடும் பாடல்களையும் இவரே பாடியிருந்தார். தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் சின்மயி.
அமெரிக்காவில் இசை
நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ள சின்மயி, இதுகுறித்து வெளியிட்டுள்ள
ட்வீட்டில், ``நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா
செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர்
அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது.
நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் மெம்பர்ஷிப் ரத்துசெய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக