Ra. Vinoth :
இந்தப் படத்திலிருக்கும்
இவர்கள் தான்
பெற்ற மகளைக்
கொடூரமாகக் கொலை
செய்த
சுவாதியின் அப்பா சீனிவாசனும், பெரியப்பா வெங்கடேசனும். அவர்களது
முகத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் பார்த்தேன். கிழிந்த சட்டை,
செருப்பில்லாத கால், ஒட்டிப் போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே
பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும்
நிறைந்திருக்கிறது. சாதி வெறிக்கான குணாம்சமாகக் கருதும் எதுவும் இவர்களது
முகத்தில் இல்லை.
'பொசுக்'குன்னு இருக்கும் இந்த மனிதர்களிடத்தில
எங்கிருந்து சாதி வெறி வந்தது? சாதி எப்படி இந்தச் சாதாரண மனிதர்களிடம்
இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது? அறிவியல் வளர்ந்த இந்த 21-ம்
நூற்றாண்டிலும் எப்படி இன்னும், இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்? பெற்ற
மகளை, சக மனிதரைத் துள்ளத் துடிக்கக் கொல்லும் மனநிலையை எங்கிருந்து
பெற்றார்கள் இவர்கள் என யோசிக்கவே முடியவில்லை. நாமெல்லாம் யோசிக்கவே
முடியாத அளவு, சாதி ஆழமாகவும் விருட்சமாகவும் வேர் பிடித்துப்
பாய்ந்திருக்கிறது என்பது மட்டும் நிஜம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக