புதன், 14 நவம்பர், 2018

BBC : உலகிலே இந்தியாவில் தான் அதிகமான பொய் தகவல்கள் பரப்பப்படுகிறது.

Swathi K : நமக்கு பல வருஷத்துக்கு முன்னாடியே தெரிந்த ஒரு செய்தியை BBC
** இந்தியர்களின் உணர்ச்சியை தூண்டும் விதமாக பொய்யான தகவல்கள் பரப்படுகிறது..
** கிட்டத்தட்ட பொய் செய்திகள் அனைத்தையும் பரப்புவது வலதுசாரி அமைப்புகள் (பிஜேபி, RSS, ஹிந்துத்துவா, மோடி சார்பு அமைப்புகள், ...)
** பொய் செய்திகளுக்கு அவர்கள் பயன்படுத்துவது "நாட்டுப்பற்று", "தேசியம்", "தேசபக்தி", "இறைநம்பிக்கை" இது போன்று மக்களை உணர்ச்சி வயப்பட செய்யும் வார்த்தைகள்..
** சிறுபான்மை இனத்திற்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பியதால் கடந்த ஆண்டில் மட்டும் 32 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் இந்தியாவில்.... சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை பலமடங்கு உயர்ந்துள்ளது..
** ரொம்ப வருத்தமான செய்தி என்னவென்றால்.. பொய் செய்திகளை பரப்ப வலதுசாரி அமைப்புகள் ஒரு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர்.. இது தனி மனிதர்களால் மட்டும் உருவாக்கி பரப்பபடுவது இல்லை..

மாபெரும் ஆய்வு செய்து கண்டுபிடித்து இருக்கிறது. அது என்ன செய்தின்னா.. ** இந்தியாவில் தான் அதிகமான பொய் தகவல்கள் பரப்பப்படுகிறது.

இதெல்லாம் அந்த ரிப்போர்ட் சொல்லுது.. நமக்கு தான் இது பல வருடங்களாகவே தெரியுமே.. மோடியில் இருந்து அடிமட்ட தொண்டன் வரைக்கும் பொய் செய்தியை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருக்கிறார்கள் என்பது..
படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் இப்படி எல்லோரையும் பொய் செய்திகள் மூலம் முட்டாள்கள் ஆக்கிய பெருமை வலதுசாரி அமைப்புகளை சாரும்.
இனிவரும் உலகம் 100% இன்டர்நெட் உலகம் தான்.. நமது குழந்தைகளுக்கு எப்படி உண்மையான, பொய்யான செய்தியை கண்டறிவது பற்றியும் சொல்லித்தருவது நமது கடமை... இல்லை என்றால் ஒரு பொய்யான மாயையை நம்பி உண்மையை தொலைத்து நிற்பார்கள் வருங்கால சந்ததியினர்.
@மோடி, ஹிந்த்துவா, தேசபக்தி பக்தர்களுக்கு - உங்கள் வாழ்க்கையை தொலைத்தது இருக்கட்டும்.. உங்கள் குழந்தைகளுக்கு இனியாவது உண்மையை சொல்லி வளர்க்கவும்..
- Swathi K
Reference:
https://www.bbc.com/news/world-46146877
https://www.ndtv.com/…/beyond-fake-news-bbc-fake-news-in-in…

கருத்துகள் இல்லை: