tamil.oneindia.com : சென்னை: சித்து சாமியார் சதுர்வேதியை தேடி பிடிப்பதில் இன்னும் போலீசாருக்கு சிரமம் நிலவி வருகிறது.ஆன்மீக சொற்பொழிவாளர்.. முதுநிலை பட்டதாரி.. ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் நிறுவனர்..தான் சதுர்வேதி. தன்னை தானே சாமியார் என்று சொல்லி கொண்டவர். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று சொல்லி கொண்டவர். அரிசியை வெண்பொங்கலாக மாற்றுவது உள்ளிட்ட பல சித்து வேலைகளை செய்தவர்.
பெண்களை மயக்கும் கில்லாடி... தாடி, மீசையுடன் சாமியார் போலவே தோற்றம் இருந்ததால் ஏராளமான பெண்கள் தங்கள் பிரச்சனை தீர்க்க இவரை தேடி வந்தனர்.
அப்படிதான் 2004-ம் ஆண்டு ஆழ்வார்பேட்டை தொழிலதிபர் சுரேஷ் பழக்கமானார். பூஜைகளை செய்வதற்காக சுரேஷ் வீட்டுக்கு சாமியார் போக... அங்கே அவரது மனைவியும், 16 வயது மகளும் முழுக்க பக்தைகளாகவே மாறிவிட்டனர்.
நாள் ஆக ஆக சுரேஷின் வீட்டின் ஒரு பகுதி சாமியார் வசம் போனது.. கொஞ்ச நாளில் மனைவி, மகளும் சாமியார் வசம் போய்விட்டார்கள். தாய்-மகள் என இருவரையும் சாமியார் பூஜை செய்வதாக கூறி நிர்வாணப்படுத்தியது... பலமுறை பலாத்காரம் செய்தது.. பிறகு தாய்- மகள் இருவரையும் கடத்தி சென்றது... என்று பகீர் சம்பவங்கள் நடக்க, நடக்க சுரேஷ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க போய் இந்த பிரச்சனை பூதாகரமானது.
கற்பழிப்பு, கடத்தல் உள்ளிட்ட 18 பிரிவுகளில் சாமியார் மீது வழக்கு பதிவு ஆனது. நீண்ட வருடங்களுக்கு சாமியார் கைது செய்யப்பட்டார், சுரேஷின் மனைவியும் மகளும் மீட்கப்பட்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக