தினகரன் : வாஷிங்டன்: ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என
ஐநாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார். அமெரிக்கா இந்தியா
நட்புறவு மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி
ஹாலே கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் ஹாலே பேசியதாவது: இந்தியாவுடன்
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நாங்கள் கவனம் செலுத்தி
வருகிறோம். தீவிரவாதிகளை அறுவடை செய்யும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிபர்
டிரம்ப் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அமெரிக்காவுக்கு ஒரு காலத்தில்
பாகிஸ்தான் சிறந்த நண்பனாக இருந்தது. இதனை நாங்கள் மதித்தோம். ஆனால்
பாகிஸ்தான் என்று மட்டுமில்லை, எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்காவைத்
தாக்கும் எண்ணத்துடன் இருக்கும் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் தருவதை
நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை இந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்து கொள்ள
வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பணிகளில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும். ஆப்கனின் நிலைத்தன்மைக்கு இந்தியா ஏற்கனவே முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த பிராந்தியத்தில் இரு நாடுகளும் எங்களுக்கு முக்கிய நட்பு மற்றும் கூட்டாளி நாடுகள். உள்கட்டமைப்பு மற்றும் நிதி விவகாரத்தில் மட்டுமல்லாமல் பாகிஸ்தானையும் கருத்தில் கொண்டு, ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக