திங்கள், 16 அக்டோபர், 2017

திருக்குறளின் முதல் குறள் உச்சரிப்பு பிழையால் ......., தவறாக கற்பிக்கப்படுகிறது.

Thagadoor Sampath : திருக்குறளின் முதல் குறள் உச்சரிப்பு பிழையால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தவறாக கற்பிக்கப்படுகிறது.
ஆதி பகவன் எனும் இச்சொற்றொடர் Aadhi bagavan என்று உச்சரிக்கப்படுகிறது. அது தவறு Aadhi pagavan என்றே உச்சரிக்க வேண்டும்.
அதாவது,
பகவன் (pagavan) என்பது பகலவனை குறிக்கும் செய்யுள் இலக்கண சுருக்க குறிப்பு ஆகும்.
ஆகவே ஆதி பக(ல)வன் என்றே கொள்ள வேண்டும்.
மேலும், 'ஏடெடுத்து எழுதியோர் பிழை'யால், திருக்குறளில் பல திரிபுகள் ஏற்பட்டுள்ளதாக பலர் கூறுவர். அவ்வகையில், வ.உ.சிதம்பரனார் அவர்கள் தனது திருக்குறள் உரையில் பலகுறள்களில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். அந்த திருத்தங்களுக்கு இலக்கண விளக்கமும் தருகிறார்.
அவ்வகையில், ஐயா Hv Vichu அவர்கள் 'தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்' எனும் நூலில் 'ஆதிபகலன்' என்றே குறிப்பிட வேண்டும் என்கிறார். 'ல' என்பது 'வ' என்று எடுத்தெழுதப்பட்டிருக்கலாம் என்பதே அவர் கருத்து.

அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
தமிழ் எழுத்துக்கள் எல்லாம் 'அ' கரத்தை அடிப்படையாகக் கொண்டவை. அது போன்றே, இந்த உலகம் பகலவனை அடிப்படையாகக் கொண்டே தோன்றியது.
இக்கருத்தின் அடிப்படையிலேயே திருக்குறள் முதல் அதிகாரத்தின் மற்ற ஒன்பது குறள்களும் உள்ளன. ஒன்பது குறள்களும் கடவுள் என்பதற்கு இலக்கணத்தை குறிப்பிடுகிறதேயன்றி, எந்த மத கடவுளையும் குறிப்பிடவில்லை.
எந்த மதக் கடவுளும் திருவள்ளுவர் குறிப்பிடும் இந்த இலக்கணத்தித்குள் அடங்கவில்லை.
இன்று கற்பிக்கப்பட்ட கடவுள்கள் அனைத்தும், 'காட்டுமிராண்டித்தன, முட்டாள்தன, அயோக்கியத்தனத்திலேயே அடங்கும்.

கருத்துகள் இல்லை: