மின்னம்பலம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் தனக்கு எவ்வித
பிரச்னையும் இல்லை என்றும் அப்படி இருந்தால்தான் சமாதானம் ஆக முடியும்
என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்
தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கடந்த 14ஆம் தேதி டெல்லியில் சந்தித்துப் பேசினர். சந்திப்பின்போது காங்கிரஸின் உட்கட்சி தேர்தல் விவகாரங்கள் குறித்தும், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸுக்குப் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் டெல்லி தரப்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும் திருநாவுக்கரசரையும் அழைத்து சரமரசம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (அக்டோபர் 16) செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், ‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடனான பிரச்னை சமரசமாகிவிட்டதா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தீபாவளியை முன்னிட்டு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை, நானும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினோம். வரும்போது ஒன்றாக பேசிக்கொண்டுதான் வந்தோம், ஒன்றாகத்தான் அமர்ந்து சாப்பிட்டோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. பிரச்னை இருந்தால்தானே சமரசம் செய்துகொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக