திங்கள், 16 அக்டோபர், 2017

*செக்ஸ்-பெண்-ஆர்கசம்* .. வெளிப்படையா பேச பெண்களை அனுமதிங்க ! இல்லையெனில் ... .

Lulu Deva Jamla< *செக்ஸ்-பெண்-ஆர்கசம்*
//ஒரு ஆண் பெண் உறவென்பது மிகவும் புனிதமானது. பொழுது போக்காய் அதை பற்றி பேசுவது தவறு!//
👆👆👆இது நேத்திக்கு ஒரு பதிவில் ஒருத்தரோட பின்னூட்டம். அதுக்கு நான் பதில் குடுக்கவே தேவையில்லாம பண்ணிட்டா ஒரு 42 வயசுக்காரி பேபிமா... இந்தா படி 👇👇👇
“பொழுது போக்காய்? என்ன புண்ணாக்கு பொழுது போக்காய்..? இத கேட்க மாட்டியா லுலு.. இங்க எத்தன பொண்ணுங்க எங்களை ஒளிச்சிக்கிறோம் தெரியுமா? எங்கள் ஒவ்வொருவரின் மனதை தான் நீ எழுதாக்குகிறாய்! உன் எழுத்த படிக்கிற பொண்ணுங்க எத்தன பேரு இவளுக்கு எல்லாமே தெரியுதுன்னு பேரு மூச்சு விடறாங்கன்னு தெரியுமா.. ? எப்படி நான் நினைக்கிறத அப்படியே எழுதுறான்னு துள்ளி உள்ளுக்குள்ளே குதிக்கிறாளுங்க தெரியுமா..? தன்னை மாத்திக்கிறாளுங்க தெரியுமா..? இன்னும் சிலது உன் மேல காண்டு இருந்தாலும் மறைஞ்சு படிச்சிட்டு என்ன உண்மையாத்தான் சொல்லுறான்னு வெளிய துப்பிகிட்டு வேஷம் போடராளுங்கன்னு தெரியுமா..? இங்க லுலு பதிவிடறது வாழ்க்கை தேடலில் தொலைஞ்சி மெல்ல மெல்ல தேஞ்சிகிட்டு இருக்கிற மனசுங்கள கொஞ்சம் பாருங்கடா பாருங்கடின்னு தான்.. இதையெல்லாம் எழுதி ஆபாசவாதின்னு பேரு வாங்கணும்னு அவளுக்கு வேர்த்தா வடியுது? லுலு செக்ஸ் பத்தின பெண்ணுணர்வுகள் பத்தி எழுதுறது வெறும் பொழுது போக்குக்கு அல்ல! மைன்ட் இட் யூ இடியட்ஸ்! 😏

Adding to that, நேத்திக்கு என்கிட்ட வீடியோ கால் பண்ணி பேசுன ஒரு பெண்மணி கணவனை இழந்து தனியா தன் குழந்தையோட வாழறவங்க, தன் 48 வயது தோழி ஒருத்தவுங்கள அறிமுகம் செஞ்சு வச்சாங்க, அவுங்களுக்கு ஏதோ டவுட் இருக்கு கேக்கணும்னு சொன்னாங்கன்னு சொல்லி. நான் “என்ன பேபி, சொல்லு” (ஆமா அவுங்க எல்லாம் வயசுல என்னைவிட பெரியவங்க தான், ஆனா அவங்க அனுபவக்குறைவுகள பார்க்கிறப்போ என் கண்ணுக்கு பேபீஸா தான் தெரியிறாங்க) அப்டீன்னு சொல்லவும், தயங்கிகிட்டே, “எனக்கு ஒவ்வொருவாட்டி உடலுறவின் போதும் சரியான வலி உண்டாகுதுமா. அதனால அதுல விருப்பமே இல்ல. புருஷனுக்காக தான் செஞ்சிகிட்டு இருக்கேன். செக்ஸ் பண்ணுறப்போ நமக்கும் ஏதோ இன்பமா இருக்கும்னு நீங்க எழுதியிருக்கீங்கன்னு இவ (என் ஃப்ரெண்ட்) சொன்னா, அதான் கேக்குறேன், பெண்களுக்கு அப்டி ஒரு உணர்ச்சி இருக்காம்மா?” கேட்ட ஒரு நிமிஷம் அதிர்ச்சியில என்னால பேச முடியல. அப்புறம் சுதாரிச்சிகிட்டு சில டிப்ஸ் சொல்லி குடுத்தேன், எப்டி Sex lubricants use பண்ணுறது, Foreplay பண்ணுறது அப்டீன்னு.
அவுங்க புருஷன் தனக்கு மூட் ஆன உடனே இவுங்கள தயார் படுத்தாமலே ஏறி நுனிப்புல் மேஞ்சுகிட்டு முடிச்சிருவாருன்னு சொன்னாங்க. நான் அதுக்கும் ஐடியா குடுத்தேன் எப்டி இதப்பத்தி அவருகிட்ட பேசுறதுன்னு. அதுல அவுங்களோட பயம் என்னென்னா, இதப்பத்தி புருஷன்கிட்ட பேசினா தப்பா நினைச்சுக்க மாட்டாரான்னு தான். அந்த அளவுக்கு பெண் பாலியல் குறித்து வெளிப்படையா பேசுறது தப்புன்னு அவுங்க மனசுல உருவேற்றப்பட்டிருக்கு. சரின்னு அதுக்கும் எப்டி இதையெல்லாம் ஒரு கதை மாதிரி சொல்லி புருஷன கன்வின்ஸ் பண்ணுறதுன்னு சொல்லிக்குடுத்து அனுப்பினேன். கால் கட் பண்ணுறப்போ அவுங்க முகத்துல தெரிஞ்ச தெளிவு, மகிழ்ச்சி, அந்த பெண்கள் ரெண்டுபேருமே “லவ் யூ மா உம்மா” அப்டீன்னு பறக்கிற முத்தம் குடுத்திட்டு போனது... அதுக்காகவே நான் இன்னும் இங்க எவ்வளவு வேணா கல்லடி படலாம்னு தோணிப்போச்சு.
48 வயசு வரை ஒரு இந்திய தமிழ் திருமணமான பெண் “ஆர்கசம்” அப்டீன்னா என்னன்னே தெரியாம தன் இணையோட விருப்பத்தை மட்டும் நிறைவு செஞ்சிகிட்டு வலியோட வாழ்ந்திருக்கான்னா அப்ப உங்க நாட்டுல பாலியல் கல்வியோட முக்கியத்துவம் எவ்வளவுன்னு பார்த்துக்கங்க. இதையெல்லாம் பத்தி நாம இங்க கை வலிக்க வலிக்க எழுதினா, உங்களுக்கு “அய்யே ஆபாசம்”, “பொழுது போக்குக்காக எழுதுறா”, “ஆம்பளைகள ஜொள்ளுவிட வைக்கிறதுக்காக எழுதுற ஆயா” இப்டியெல்லாம் தோணுதா டே?
இனி ஆர்கசம்னா என்னன்னே தெரியாத பெண்களுக்காய் கவுசல்யா என்பவர் எழுதியிருக்கும் கட்டுரையை பகிர்ந்து விட்டுட்டு போறேன். கொஞ்சம் நேரெமெடுத்து படிங்க!
—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—
உச்சகட்டம் (ஆர்கஸம் )
கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும் இறுதி நிலையாகும். ஆண்களை பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களை பொறுத்தவரை இது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.
இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம்.
* அப்படி என்றால் என்ன..??
* அந்த உணர்வு எப்படி இருக்கும் ??
* அந்த உணர்வு கட்டாயம் உணரபட்டுத்தான் ஆகவேண்டுமா ??
* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன ??
* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிடோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிபிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் தான். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும்.
* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.
இந்த உணர்வலைகளில் உடல் அதிக சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும்.
* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் 'முழு திருப்தியை ஒரு பெண்ணுக்கு தராது' என்பதே ஆய்வுகளின் முடிவு. உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனைவி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே.
* இங்கே நான் சொல்ல போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்...ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்... உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடியவில்லை என்றால் அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் தான் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை. .....??! ஆனால் உச்சகட்டம் போக முயற்சி செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள் இருக்கலாம்....சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், உறவை குறித்த முறையான தெளிவின்மை, உறவை பற்றிய அச்சம் இவை போன்ற சில காரணங்களும் உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.
எப்படி பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை. அங்கே சரியாக நடைபெறவில்லை என்றால் அதன் எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடகூடாது. கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்து செல்வது மிக அவசியம்...அதன் பிறகே தன் தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். அப்போதுதான் கணவன் தன் மனைவியை வென்றவன் ஆகிறான்...!!
ஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம் (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்தி படுத்த இயலாமல் போகலாம்....அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதை பற்றி தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் இல்லையென்றால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
பெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால் அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது. ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. தடம் மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்று புரிய வரும் போது...வருடங்கள் ஓடி போயிருக்கும்....தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.
'ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை' என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாது.
—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�
படிச்சாச்சா டே? இனிமேலாவது செக்ஸ் உறவுங்கிறது புனிதம் மயிருனு பீலா உட்டுகிட்டு திரியாம அதைப்பத்தி வெளிப்படையா பேச பெண்களை அனுமதிங்க. அடுத்தமுறை உறவு கொள்ளுறப்போ பொண்டாட்டி/காதலிக்கு ஆர்கசம் கிடைச்சுதான்னு உறுதி செஞ்சுகிட்டு படுங்க டே. இல்லன்னா ஒண்ணு உன் தலையில கல்லை போட்டு கொல்லுவா, இல்லன்னா வேற எவன்கூடயாவது உறவு வச்சுக்குவா.... மைண்ட் இட்!
லுலு தேவ ஜம்லா
15/10/2017

கருத்துகள் இல்லை: