நக்கீரன் :ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு எடுத்துள்ளதாகவும், இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இடைத்தேர்தல் தோல்வி ஆளும் பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்தநிலையில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமித்து, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து, மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ராகுலின் தலைமையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக ராகுல் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக