டெல்லி பாவனா தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரும், நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.
இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வெற்றி
புதுடெல்லி: டெல்லி, கோவா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 4 சட்டசபை தொகுதிக்கு கடந்த 23-ந்தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கோவாவில் உள்ள பனாஜி, வில்போய் ஆகிய 2 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. டெல்லியில் உள்ள பாவனா தொகுதி இடைத் தேர்தலில் தொடக்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திரகுமார் முன்னிலையில் இருந்தார். ஆனால் நேரம் செல்ல செல்ல ஆம் ஆத்மி வேட்பாளர் முன்னிலை பெற்றார். 14 சுற்றுகள் முடிவில் ஆம் ஆத்மி வேட்பாளர் ராம்சந்திரா 27,647 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திரகுமார் 22,938 வாக்குகளுடன் 2-வது இடத்திலும், பா.ஜனதா வேட்பாளர் வெட்பிரகாஷ் 19,542 ஓட்டுகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இறுதியாக ஆம் ஆத்மி வேட்பாளர் ராம்சந்திரா 24,052 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் ஆம் ஆத்மி வேட்பாளர் 59,886 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் பிரகாஷ் 35834 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பா சுரேந்தர் குமார் 31919 வாக்குகளும் பெற்றனர். அதேபோல், நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த புமா பிரம்மானந்தா 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒ.எஸ்.ஆர் வேட்பாளரை தோற்கடித்தார். மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக