செவ்வாய், 22 நவம்பர், 2016

முதல்வர் ரங்கசாமி வெற்றி ! அரவக்குறிச்சி ,தஞ்சாவூர்,திருப்பரங்குன்றத்தில் அதிமுக முன்னிலையில்


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வென்றுள்ளார். புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்வாக வேண்டும் என்னும் நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு எதிராக அதிமுக வேட்பாளராக ஓம்சக்தி சேகர் போட்டியிட்ட நிலையில் இன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று சுற்றுகள் நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ளார்.
நாராயணசாமி மொத்தம் 18,709 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 7,526 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஓம்சக்தி சேகரை 11,183 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் நாராயணசாமி. இடைத்தேர்தலில் நாராயணசாமி வெற்றி பெற்றுள்ள நிலையில் தன் முதலமைச்சர் பதவியை தக்க வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டபோது, “இந்த வெற்றி திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி. கடந்த ஐந்து மாத கால காங்கிரஸ் ஆட்சிக்கும் எனக்கும் மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம். நெல்லித்தோப்பு மக்கள் பலவிதமான கோரிக்கைகளை என்னிடம் வைத்தார்கள். அந்த கோரிக்கைகள் அனைத்தையும் நான் அவர்களுக்கு செய்து கொடுப்பேன். என் வெற்றிக்காக உழைத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி” என்றார். minnambalam.com

கருத்துகள் இல்லை: