நாட்டில்
ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீரழிவுக்குப் பொறுப்பேற்று மத்திய ரிசர்வ்
வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலக வேண்டும் என்று அனைத்திந்திய
வங்கிகளின் அதிகாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில்
நிதிநெருக்கடியால் மக்கள் மத்தியில் எழும் பிரச்னைகள் குறித்தோ, மத்திய
அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான செய்திகளையோ, எதிர்க்கட்சிகள் முன்
வைக்கும் கேள்விகளுக்கான பதிலையோ, மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
பேசுவதில்லை, எதிர்கொள்வதில்லை. ரிசர்வ் வங்கியை மையப்படுத்தி நாட்டில்
பிரச்னை வலுத்துள்ள நிலையில் அதன் ஆளுநர் தொடர்ந்து மௌனம் சாதித்து
வருகிறார்.
அதேபோல் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், நிதிச்செயலர் அசோக் லவாசா அல்லது நிதிச்சேவைகள் செயலர் அஞ்சுலி சிப் தக்கல் ஆகிய இருவரில் ஒருவர் கூட செய்தியாளர்களை இதுகுறித்து சந்திக்கவில்லை.
ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, நிதி நிர்வாகம், புதிய விதிமுறைகள், சலுகைகள் என சகலத்தையும் பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ்தான் வெளியிடுகிறார். இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மத்திய அரசின் செயல்பாடுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு உடன்பாடு உள்ளதா? அவரது அதிகாரங்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதா? மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதற்கும் சக்திகாந்த தாஸே பதில் கூறியிருக்கிறார். “யார் அரசின் சார்பாக பேசுகிறார்கள் என்பது தேவையற்ற விஷயம். அரசின் சார்பாக நான் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அரசின் சார்பாகவே பேசி வருகிறேன். தனிப்பட்ட முறையில் அல்ல. எனவே நான் பேசுகிறேனா அல்லது வேறு யாராவது பேச வேண்டுமா என்ற கேள்வி தேவையற்றது. நாம் இந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டாமே! யார் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள் என்பது சம்பந்தமற்ற கேள்வி. அரசு தேவையான அனைத்து தகவல்களையும் மக்களிடம் அளிக்க வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்றார். இந்த பதிலை ரிசர்வ் வங்கி ஆளுநரே அளிப்பதில் என்ன பிரச்னை என்பதுதான் புரியவில்லை.minnambalam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக