கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தி யாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’நாடெங்கும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகி உள்ள 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் நடக்கின்றன. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுகிறது. மக்கள்கியூவில் நிற்கிறார்கள் என்றெல்லாம் பெரும் பரபரப்பை கிளப்புகிறார்கள். ஆனால் ம.தி.மு.க., சரியானது என வரவேற்கிறோம்.
அழுத்தமாக ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நரேந்திரமோடி பதவி ஏற்கும் போது நாங்கள் கூட்டணியில் இருந்தோம். அவர் ராஜபக்சேவை பதவி ஏற்புக்கு அழைத்த போது எந்த ஒரு தலைவரும் கண்டு கொள்ளாத நிலையில் நம் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஜராத் பவனுக்கு சென்று போராட்டம் நடத்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டோம்.
நியாயம் என்றால் வரவேற்பேன். தற்போது நரேந்திர மோடி வரவேற்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள், அரசியல் திமிங்கலங்கள், 100, 500 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக டன் கணக்கில் அச்சடித்து ஏ.டி.எம். மையங்களில் பொருத்துகிற வகையில் மக்கள் அல்லல்படாதப்படி செய்து இருக்கலாமே? என்று கூறுகிறார்கள்.
காற்றில் கூட தடம் கண்டு பிடித்து விடுவார்கள் கறுப்பு பண பதுக்கல் காரர்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவிப்பதற்கு முன்பே வெளியே தெரிந்து இருந்தால் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பதுக்கல் காரர்கள் முதல் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள அரசியல் திமிங்கலங்கள் வரை எளிதாக கறுப்பு பணத்தை புழக்கத்தில் விட்டு இருப்பார்கள்.
அதனால் தான் பிரதமர் மோடி நிதி அமைச்சருக்கே தெரியாமல் கேபினட்டுக்கே தெரியாமல், திடீரென அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதனால் சாதாரண மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் அனைவரது வரவேற்பையும் மோடி பெற்றுள்ளார்’’ என சொல்லி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக