செவ்வாய், 22 நவம்பர், 2016

தேர்தல் ஆணையத்தின் அனுசரணையுடன் வெற்றி பெற்ற அதிமுக?


அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில், மூன்றிலும் திமுக-வை வீழ்த்தி அதிமுக வெற்றிபெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவு பற்றி கருத்து வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘ஆளுங்கட்சியினரின் அராஜகம், பண விநியோகம் மற்றும் அமைச்சர்களின் விதிமீறலோடு அதிமுக பெற்றிருக்கும் இந்த வெற்றியானது, தற்காலிகமானது’ என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ‘ஆளுங்கட்சியினரின் அராஜகம், அமைச்சர்களின் முறைகேடுகள், பணப் பட்டுவாடா அதோடு இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் துணையோடு ஆளுங்கட்சியாகிய அதிமுக பெற்றிருக்கும் இந்த வெற்றி, தற்காலிகமானதே. இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் வரும் காலங்களில் அதிமுக ஒரு மிகப்பெரிய தோல்வியைத் தழுவவேண்டிய சூழல் வரும். இவ்வளவு அராஜகங்களையும் தாண்டி திமுக இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருப்பதே அதற்குச் சான்று’ என்று கூறினார். minnambalam.com

கருத்துகள் இல்லை: