செவ்வாய், 22 நவம்பர், 2016

2000 நோட்டை பிச்சைகாரர்கள் கூட வாங்க தயங்குவார்கள். மன்சூர் அலிகான் ஒரு தீர்க்கதரிசி !



கறுப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி வகுத்த திட்டத்துக்கு நாடு முழுக்க பலத்த எதிர்ப்பும், ஒரு சில இடங்களில் ஆதரவும் நிலவி வருகிறது. ரூபாய் 500, 1000 தாள்கள் செல்லாது என்று அறிவித்துவிட்டு புதிய ரூபாய் 500, 1000, 2000 தாள்களை அறிமுகம் செய்வதுதான் மோடியின் திட்டம். இதில் ரூபாய் 500, 1000 தாள்களை முதலில் வெளியிடாமல் ரூபாய் 2000 தாள்களை முதலில் வெளியிட்டது ஒரு சீரிய சிந்தனை. இந்த ரூபாய் 2000 நோட்டுகள் மிகவும் தரமான முறையில் அமெரிக்கன் டாலர் தரத்துக்கு அச்சிடப்பட்டுள்ளது என்று மோடி அரசு தெரிவித்திருந்தது. இதில் GPS வசதி உள்ளது. யாரும் ஒளித்து வைக்க முடியாது மீறி ஒளித்து வைத்தால் செயற்கைக்கோள் உதவி கொண்டு கண்டுபிடித்து விடலாம் என்று S.Ve.சேகர் அவர்கள் மனம் நெகிழ ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
ரூபாய் 2000 தாள் சாயம் போகத் தொடங்கியது, தரமாக இல்லை என மக்கள் கூவினார்கள்.
ஏடிஎம்களில் பணம் எடுக்க வருபவர்கள் ரூபாய் 2000 தாள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ரூபாய் 1,900 எடுக்கத் தொடங்கினார்கள். மீறி வேறு வழியின்றி ரூபாய் 2000 எடுக்க நேர்ந்தால் அதற்கு சில்லறை மாற்றுவது பற்றிய புலம்பல்களோடு தான் செல்கின்றனர்.
இப்படி ஒரு நிலையில் நம் பாரத தேசத்தின் மீது அன்புள்ளம் கொண்ட சிலர், நமது ரூபாய் 2000 நோட்டுகள் தான் உலகிலேயே சிறந்தது என UNESCO அறிவித்திருக்கிறது என்று வதந்தியை கிளப்ப, அது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவ ஆரம்பித்தது. இந்த ரூபாய் 2000 நோட்டுகள் அறிமுகமான நேரம் இந்த திட்டத்துக்கு மன்சூர் அலிகான் தன் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது அந்த ரூபாய் 2000 நோட்டை எடுத்துக்காட்டி இதை பிச்சைக்காரர்கள் கூட வாங்க தயங்குவார்கள் என்று கூறினார். அவருக்கு அப்போதே அதன் தரம் தெரிந்திருக்கிறது. மன்சூர் அலிகான் ஒரு தீர்க்கதரிசி. நம் தேசத்தின் மீது பற்று(!) கொண்டவர்கள் தான் UNESCO அமைப்பை இதில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். பொய் சொன்னது மட்டுமல்லாமல் ‘proud to be indian' என்று பதிவிட்டுள்ளனர். பொய் சொல்வதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: