சனி, 19 நவம்பர், 2016

பர்வேஸ் முஷராப்: இந்தியாவிலே தமிழர்கள்தான் கல்வியில் சிறந்தவர்கள்


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி ஒன்று அளித்தார். அதில் பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் மிகவும் வெளிப்படையாக பேசுபவர். அவருடைய வெளிப்படையான கருத்துக்கள் அந்த நாட்டிலேயே பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர்.இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது.
அங்கு தகவல் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள சாதனைகளால் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.குறைந்த அளவு தென் இந்தியர்களை தான் நான் சந்தித்திருந்தாலும் பாகிஸ்தான் குறித்தும் இரு நாட்டு நல்லிணக்கம் குறித்தும் தென் இந்தியர்களின் நேர்மையான அணுகுமுறையை நான் மதிக்கிறேன் என பேசியுள்ளார்  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: