பிரதமர் நரேந்திர மோடி, கறுப்புப்பணத்தை காணாமல்
போக்கவும், கள்ள நோட்டுகளைக் களையவும், ரூபாய் 500, 1000 நோட்டுகள் இனி
செல்லாது என்று அதிரடியாக அறிவித்த ஐந்தாவது நாள் இன்று. ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை நாள் என்பதால், காலை 6.00 மணிக்கு கடை வீதிக்கு சென்று மீன், கறி,
காய்கள் வாங்கப் போனவர்கள், 10:00 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதில்
பலர் சுகர், பி.பி, தைராய்டு பிரச்னை உள்ள நோயாளிகள் என்பது
குறிப்பிடத்தக்கது. கடைவீதிக்குப் போனவர்கள் இன்னும் வரவில்லையே என்று
வீட்டிலிருந்து மனைவிக்கு கணவரும், கணவருக்கு மனைவியும் கைபேசிக்கு
தொடர்புகொண்டு கேட்டால், “ஏன் இப்படி உயிரை வாங்குற, காலையிலிருந்து ஏடிஎம்
வாசல்ல வரிசையில் கால் கடுக்க நின்னுகிட்டு இருக்கேன்” என்று சொல்ல,
பதிலுக்கு, “பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுக்கு வந்திருங்க.
நீங்க சுகர் டேப்லெட் போட்டுக்கணும். டென்ஷன் ஆகாதீங்க” என்று சொல்ல, இந்த
உரையாடல் பக்கத்தில் இருந்தவர் காதில் விழ,
அவர் சத்தமாக, “நாட்டில்
கொள்ளையடித்து பணத்தை பதுக்கி வைத்திருப்பவனும் வரி ஏய்ப்பவனும் சொகுசா
இருக்கானுங்க. எங்களைப் போல ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களையும்,
அப்பாவிகளையும், வாக்களித்த குற்றத்துக்கு வதைத்து எடுக்கிறார் பிரதமர்
மோடி” என்றார் கோபமாக. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து
ஏற்பட்டிருக்கிற வேதனையால், மக்களின் ஒட்டுமொத்த கோபமும் மோடி அரசு மீது
திரும்பியுள்ளது. minnambalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக