minnambalam.com :முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு இன்று 55வது நாள்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர்களுக்கு
வாக்களிக்கக் கேட்டு ஜெயலலிதா பெயரில் அறிக்கை வந்தது. மறுபிறவி
எடுத்துள்ளேன் என்று, அந்த அறிக்கையில் உருக்கமாக இருந்தது. அடுத்து,
நேற்று இரவு விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து
ஜெயலலிதா பெயரில் அறிக்கை வந்தது. தொலைபேசி மூலமாக ஜெயலலிதா இரங்கல்
தெரிவித்ததாக விசாலாட்சியின் மகன் மதிவாணன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா
அறிக்கை டிக்டேட் செய்யும் அளவுக்கு தயராகிவிட்டாரா என்ற சந்தேகக் கேள்வி
எழுந்தநேரத்தில், ஜெயலலிதா தொலைபேசியில் பேசினார் என்று வந்த தகவல் தமிழக
மக்களை சந்தேக சந்தோஷத்தில் தள்ளியது. ‘அம்மா குணமாகிட்டாங்க என்று
தெரிஞ்சாலேபோதும். அவங்க அறிக்கை விட்டாங்க... பேசினாங்க... என்று
சொல்வதெல்லாம் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. அம்மா ஆஸ்பத்திரியில அட்மிட்
ஆனபோது ஒரு டிராமா போட்டாங்க. அம்மாவுக்கு காய்ச்சல்னு சொன்னாங்க.
அப்புறம், ஆஸ்பத்திரியில இருந்தே பணிகளை கவனிப்பதாகச் சொன்னாங்க. அதெல்லாம்
பொய் என்பது அடுத்தடுத்து வந்த நாட்கள் காட்டிக் கொடுத்துவிட்டன.
இப்போதும் அப்படி எதுவும் இருக்கக்கூடாது என்பதுதான் எங்க வேண்டுதல்!’ என்று கவலையோடு சொல்கிறார்கள் அப்பல்லோ வாசலில் காத்திருக்கும் அதிமுக நிர்வாகிகள்." என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து கேள்வி ஒன்றையும் போட்டது. ‘‘சரி... முதல்வர் எப்படி இருக்காங்க? அவங்க மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்லுது?”
பதிலை அடுத்த மெசேஜில் டைப்பிங் செய்தது வாட்ஸ் அப். ‘‘ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவரை தினமும் பார்த்து சிகிச்சைதரும் மருத்துவர்கள் சிலருடன் பேசினேன். அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்களை அப்படியே தருகிறேன். சுயநினைவு இல்லாமல் மூக்குவழியாகவோ, வாய்வழியாகவோ மூச்சுவிட சிரமப்படுபவர்களுக்கு செயற்கை சுவாசம் செலுத்துவதற்காக தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதற்கு TRACHEOSTOMY என்று பெயர். அதாவது, நேரடியாக நுரையீரலுக்கு ஆக்சிஜனை செலுத்துவது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்படி தொண்டைப் பகுதியில் துளையிட்டுதான் செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசம் செலுத்தும் நேர அளவை படிப்படியாக குறைத்துள்ளார்கள். தற்போது, ஒரு நாளில் விட்டு விட்டு 8 மணி நேரம் வரை முதல்வர் செயற்கை சுவாசம் செலுத்தாமல் சுவாசிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் செலுத்துவதற்காக தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டியூப் இன்னும் அகற்றப்படவில்லை. மீதமுள்ல 16 மணி நேரம் செயற்கை சுவாசம் செலுத்தப்படவேண்டிய அவசியம் இருப்பதால் அந்த டியூப் இன்னும் அகற்றப்படவில்லை. டியூப் தொண்டையில் இருக்கும்போது பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. டியூப் அகற்றப்பட்டு அந்தப் புண் ஆறுவதற்கு சில வாரங்கள் ஆகும். அதன்பிறகுதான் மெல்லப் பேசமுடியும். படிப்படியாகத்தான் ஒவ்வொன்றாகச் சரியாகும். அதனால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்று சொன்னார்கள்." என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக