செவ்வாய், 15 நவம்பர், 2016

மம்தா பானர்ஜி அழைப்பு: ரூ.500,/ 1000 நோட்டு விவகாரம்: எதிர்க்கட்சிகள் ஓரணியில்...Currency Ban | Mamata Banerjee Calls Joint Opposition Stir Over Black Political Decision


ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி 8ந் தேதி இரவு திடீர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மோடி நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் மக்கள் 8–ந்தேதி இரவு முதல் நிம்மதியாக தூங்குகின்றனர். ஆனால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் தூக்கத்தை இழந்து தூக்க மாத்திரையை தேடி அலைகின்றனர்’’ என்று கூறினார். இதற்கு பதில் அளித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர் என்ற பிரதமரின் பேச்சு சாமானிய மக்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. மோடியின் மோசமான ரசனையை இது காட்டுகிறது. பொதுமக்களை இது போன்ற பேச்சால் நோகடிக்காதீர்கள் என பிரதமரிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். பணம் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.1½ லட்சம் கோடி முடங்கி உள்ளது. பொதுமக்கள் படும்பாடு குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நேற்று முன்தினம் பேசினேன்.
அனைத்தையும் அவர் பொறுமையாக கேட்டுக்கொண்டார். நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சந்திப்பதற்கு அவர் அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தேன்.
மக்கள்படும் துயரத்தை போக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் எந்தவித அரசியல் காழ்ப்புணர்வும் பார்க்காமல் ஜனாதிபதியை சந்திக்கும் தன்னுடைய முடிவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: