சனி, 19 நவம்பர், 2016

கலவரம் வெடித்து விடுமோ? அஞ்சும் வங்கி ஊழியர்கள் !


தமிழகத்தில் 5 ஆயிரம் கிளைகளும், 2200 ஏடிஎம் மையங்களும், இந்தியா முழுவதும் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளும் உள்ளன. கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தடுக்க, பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
புதிய நோட்டுகளான 2000 ரூபாய் நோட்டுகளை இந்தியா முழுவதும் 9ஆம் தேதி இரவு 12 ஆயிரம் கோடிதான் ரிசர்வ் வங்கி கடைசியாக விநியோகம் செய்தது. அதன் பிறகு இன்றுவரை ஒரு பைசாகூட வரவில்லை என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். செல்லாத நோட்டுகளை வங்கியில் கொடுத்து 4500 ரூபாய் வரை பெற்றுகொள்ளலாம் என்றார்கள். அதன்பிறகு நேற்று முதல் 2000 ரூபாய்க்கு மேல் எடுக்கமுடியாது என்று ஒரு நிபந்தனை விதித்துள்ளது, அதன் பின்னனி என்ன என்று விசாரித்தோம்.
வங்கியில் பணம் இருந்தால்தானே பணம் கொடுக்கமுடியும். இன்று 99 சதவிகிதம் ஏடிஎம்கள் மூடபட்டன. வங்கிகள் பெயரளவில் திறந்து வைத்துள்ளோம் பணம் இல்லாமல், மக்கள் கோபம் அதிகமாகிவருகிறது, இன்னும் இரண்டு நாட்களில் பெரும் கலவரம் வெடித்துவிடுமோ என்ற பயம் உள்ளது, காரணம் ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததினால், பணம் வரவில்லை என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: