புதுடில்லி : தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து,இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிப்பை, வாபஸ் பெறுவதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சமீபத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, 'தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது, திரும்பப்பெறும் இ.பி.எப்., தொகையில், 60 சதவீதத்துக்கான வட்டி மீது வரி விதிக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 'ஓய்வூதியத் திட்டத்தில், தொழிலாளர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் நோக்கில், இ.பி.எப்., நிதியில், 60 சதவீதத்துக்கான வட்டி மீது வரி விதிக்கப்படுகிறது' என, மத்திய அரசு விளக்கம் அளித்தது. சாமானிய மனிதனின் குரல்வளையை நசுக்கும் முயற்சி தான் EPF மீதான வரி. நல்லவேளையாக, மனம் திருந்தி நீக்கி விட்டார்கள். இதை பற்றி பேசிய ராகுல் மற்றும் மம்தாவிற்கு பாராட்டுகள். ஓய்வு பெறும் காலத்திற்காக சேர்க்கப்படும் நிதியும், fixed டெபொசிட்டில் போடப்படும் நிதியும் ஒன்றா? அரசு எப்படி இவை ரெண்டையும் ஒன்றாக பார்க்க முடியும்? அருண் ஜெட்லி முட்டாள்தனமான முடிவு. நாடெங்கிலும் இதற்கு எழுந்த எதிர்ப்பு, பிஜேபி கட்சியை மனமாற்றம் செய்து விட்டது.
அந்த பதிலில்திருப்தி அடையாத தொழிற்சங்கங்கள், வரிவிதிப்பை வாபஸ் பெறும்படி, தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அவற்றை சமாதானம் செய்யும் முயற்சியாக, பார்லிமென்டில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கையில், இ.பி.எப்., மீதான வரிவிதிப்பு குறித்து பதில் அளிப்பதாக, அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக