வியாழன், 24 ஏப்ரல், 2014

மதம் பிடித்தால் யானைக்கும் ! மனிதனுக்கும் ஆபத்து!


பட்டுக்கோட்டை, ஏப்.22- யானைக்கு மதம் பிடித்தால் காட்டுக்கு ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட் டுக்கு ஆபத்து; எனவே, மதவாத பி.ஜே.பி.யையும், அதற்கு நேராகவோ, மறைவாகவோ ஆதரிக்கும் சக்தி களை வரும் தேர்தலில் விரட்டியடிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
பேராவூரணி, பட்டுக்கோட்டையில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது (21.4.2014).
இன்டர்நெட் இளைஞர்களே!
பதினெட்டு வயது நிரம்பி இருக்கின்ற, புதிய இன்டர் நெட் இளைஞர்களை புதிதாக வாக்களிக்கப் போகிறீர்கள் மகிழ்ச்சி. நீங்கள் வெறும் இன்டர்நெட்டை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் கணினியைப் பார்க்கக் கூடிய அளவிற்கு செய்த பெருமை. திராவிடர் இயக்கத்தை சார்ந்தது. உருவாக்கிய பெருமை  தந்தை பெரியாரைச் சார்ந்தது.

தந்தை பெரியார் அவர்கள் குலக்கல்வியை அழித்திருக்காவிட்டால் இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன் சுவிட்சர்லாந்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருந்து கணினியை தட்டிக் கொண்டு இருக்க முடியாது.
நீங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.களின் வரலாற்றை, அவர்களின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மீண்டும் மோடிகள் ராஜ்ஜியம் வந்தால் மறுபடியும் நாடு பழைய கருப்பனாக மாறும்.
நாடு மனுதர்மத்திற்கு செல்லும். குலதர்மத்திற்கு செல்லும். அதனால், இளைஞர்களே! மோடியின் வளர்ச்சி யிலே மயங்கி, மோடியின் வலையிலே சிக்கி சீரழிந்து விடாதீர்கள். மோடி அணியை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஆயுதம். அறிவாயுதம் அதை சரியாகப் பயன்படுத்துங்கள்.
மோடி அலை அடிக்கிறது என்றால், மோடி நடிகரிடம் டீ சாப்பிடுவதற்கு, அப்பாயின்மெண்ட் வாங்க மூன்று மாதம் முயற்சி ஏன் எடுக்க வேண்டும்? நடிகர் அல்லவா மோடியைத் தேட வேண்டும்.
நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு இலவச மின் சாரம் திமுக அல்லவா கொடுத்தது. குஜராத் மாடல், குஜராத் வளர்ச்சி என்று பேசுகிறார்களே சில புரியாத வர்கள்; அவர்களிடம் ஒரு கேள்வி கேளுங்கள் குஜராத் தில் இலவச மின்சாரம் உண்டா? எது மாடலாக இருக்க வேண்டும்? திமுகவா, அல்லது குஜராத்தா? ஏழை எளிய விவசாயிகளுக்கு அங்கு வேலையில்லை அப்புறம் என்ன மாடல்?
அண்ணா அவர்கள் சொன்ன வாசகம்
டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்கு பகையாளி
இந்த வார்த்தை அண்ணா அவர்கள் முன்னாலே, சொன்னது என்றாலும், இன்றும் நினைவூட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே, மோடி ராஜ்ஜியம், மோடி அரசு பாட்டாளிக்கு பகையாளி என்றைக்கும். இதை சரியாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
டி.ஆர்.பாலு-விவசாயிகளின் பாதுகாவல் அரண்
டி.ஆர்.பாலு அவர்கள் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செய்திருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு. தென்னை விவசாயத்தை காப்பாற்றிருக்கின்ற முயற்சி இருக்கிறதே! அது காலம் காலமாய் மறக்கக் கூடிய ஒன்றா? டி.ஆர். பாலு அவர்கள் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். நமக்கு சூத்திரர்களுக்கு என்ன தொழில்? விவசாயம்தானே! அதனால்தான் விவசாயிகளின் பாது காப்பு அரணாக இந்தப்பகுதியில் டி.ஆர்.பாலு விளங்குகிறார்.
மோடியை விமர்சிப்பவர்களுக்கு...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோசர் என்ற பகுதியில் பா.ஜ.க.வின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் கிரிராஜ் சிங் என்பவர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் 19 ஆம் தேதி பேசும் போது நரேந்திர மோடியை பிரதமராக விடாமல் தடுப்பவர்கள், பாகிஸ்தானுக்கு செல்லத் தயாராக இருங்கள். மோடியை விமர்சிப்பவர்களுக்கு வருங் காலத்தில் (தேர்தலுக்குப் பிறகு) இந்தியாவில் இட மில்லை. அவர்கள் வசிக்க பாகிஸ்தானில்தான் இடம் கிடைக்கும் என்று பேசியுள்ளார். இதே மேடையில், பாஜகவின் முந்தைய தலைவர் நிதின் கட்காரியும் இருந்துள்ளார். இதுபற்றி அவர் ஆதரித்தோ, எதிர்த்தோ (மறுப்பு தெரிவித்தோ) எந்தவித கருத்தும் சொல்ல வில்லை. யானைக்கு மதம் பிடித்தால், காட்டிற்கு ஆபத்து, மனிதனுக்கு மதம் பிடித்தால் நாட்டிற்கு, அரசிற்கு ஆபத்து!
பி.ஜே.பி.,க்கும், அதற்கு நேர்முகமாகவோ, மறைமுக மாகவோ ஆதரவு தரும் சக்திகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.
முதலில் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டியவர்கள் யார்? யாரை சொல்லுகிறார் கிரிராஜ்சிங்? எண்ணிப் பார்க்க வேண்டும். மோடியை விமர்சிப்பவர்கள் யார். அவர் கட்சிக்குள்ளேயே இருக்கிறார்களே! முதலில் பாகிஸ்தானுக்கு செல்லப் போகிறவர் அத்வானி, அவர்தான் மோடியை கடுமையாக எதிர்க் கிறார். அடுத்தது முரளி மனோகர் ஜோசி, சுஷ்மா சுவராஜ், அதே மாதிரி ஜஸ்வந்த் சிங். ஆகவே, முதலில் பா.ஜ.க. காரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டுதான், அடுத்து நம்மை மாதிரி ஆட்களை எல்லாம் அனுப்புவார்கள். மோடி ராஜ்ஜியம் நடக்கும் போது நாம் எந்த நாட்டிற்கும் செல்ல தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பாசறையா?
தஞ்சை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் பயங்கரவாதிகளின் பாசறையா? அதை ஏன்? இந்த அம்மையார் இடிக்கி றேன் என்றார்.
இப்பொழுது இந்த அம்மையாருக்கு என்ன ஈழத் தமிழர் மீது அக்கறை? கேர் ஆப் முள்ளிவாய்க்கால் ஆட்களை கேட்டாலே தெரியுமே! அம்மையாரின் ஈழ வேடம்.
கலைஞர் அவர்கள் இந்த 90 வயதில் கடுமையாக உழைக்கிறார். இன்றைக்குக்கூட அவரின் உரையைப் படித்தேன். மிகவும் வருந்தினேன். அவருக்குக் காய்ச்சல், உடல்நிலை சரியில்லை. இருந்தாலும் கூட்டத்திற்கு வந்து இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சொன்னார்.
நான் நலிவுற்றது முக்கியமல்ல! நாடு நலிவுறாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதுதான் மிக முக்கியம் என்றிருக்கிறார். இவர் அல்லவா தலைவர் - ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு.
இந்த அம்மையார் (ஜெயலலிதா) சென்னையில் பேசிய பேச்சில் சேது சமுத்திர திட்டத்தில் பின் வாங்கு கிறார். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மீன்வளப் பாதுகாப்பு என்று. இதையெல்லாம் யார் செய்தது? வாஜ்பேயி காலத்தில் ஆட்சியில். வழிதடத்தை தயாரித்தவர்கள் இவர்கள் அல்ல. அரசியல்வாதிகளால் தயாரிக்கப்பட வில்லை. நீரி (ழிணிணிஸிமி) என்ற அமைப்பின் திட்டம்.  அம்மையாரின் இன்னொரு ராஜதந்திரம், சேது சமுத்திர திட்டத்தை இராமன் பாலம் என்று கூறித் தடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கியதே இந்த அம் மையார்தானே. இப்பொழுது ராமர் பாலம் என்று சொல் லுகிறார். இதற்கு முந்தைய அவர்களின் தேர்தல் அறிக்கை யில் இராமன் பாலம் என்று சொல்லவில்லையே!
பல லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்பைத் தடுத்தது ஜெயலலிதா அம்மைர். இதை விட வளர்ச்சிக்கு மாபெரும் துரோகம் உண்டா?
எனவே தான், அம்மையாரின் அமைதி, வளம், வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் போலி வார்த்தைகள். உண்மையான அமைதி, உண்மையான வளம், உண்மை யான வளர்ச்சி தேவையா? அதற்கு ஒரே வழி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இருக்கின்ற டி.ஆர்.பாலு அவர்களுக்கு வாக்கு அளித்தால், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் இருட்டு நீங்கும், புரட்டு ஒழியும் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலரும். இதுதான் மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்று தமிழர் தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.
.viduthalai.in/

கருத்துகள் இல்லை: