சென்னை: கோடிக் கணக்கில் பணம் தருவதாகக் கூறியும் நயன நடிகை தேசிய
கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்ய மறுத்துவிட்டாராம்.
ஸ்டார் பேச்சாளர்கள் இல்லாமல் அல்லாடும் தேசிய கட்சி ஒன்று நயன நடிகையை
பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டது. இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த
அரசியல் பெரும்புள்ளி ஒருவரை தொடர்பு கொண்டு நடிகையிடம் பேசுமாறு
கூறினார்களாம்.
அவரும் நயன நடிகையை தொடர்பு கொண்டு தேசிய கட்சி ஒன்று உங்களை
பிரச்சாரத்திற்கு அழைக்கிறது. 10 படத்திற்கான சம்பளத்தை தர அவர்கள் தயாராக
இருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகையோ
பிரச்சாரம் செய்ய முடியாது என்னை விட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை இதனால் ஆந்திரா அரசியல் வட்டாரத்தில் இருந்து தனக்கு ஏதாவது
பிரச்சனை ஏற்படுமோ என்று நடிகைக்கு பயம். உடனே தன்னுடன் நடித்து அடுத்த
படத்திலும் நடிக்கும் அரசியல் வாரிசு ஹீரோ கம் தயாரிப்பாளரை அணுகி நடிகை
விஷயத்தை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர், நான் பார்த்துக் கொள்கிறேன்
என்று கூறியதுடன் கொதிப்படைந்த ஆந்திர பெரும்புள்ளிகளின் கோபத்தை தனக்கு
தெரிந்த ஆட்கள் மூலம் தணித்துவிட்டாராம்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக