வெள்ளி, 25 ஏப்ரல், 2014

மாற்றுத்திறனாளி Actress அபிநயா இருமொழிகளில் பிஸி !

சென்னை: ஹீரோயின்கள் சிலர் மார்க்கெட் இழந்து வீட்டில் முடங்கி
கிடக்கும் இந்நேரத்தில் மாற்றுத்திறனாளி அபிநயா இருமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சசிகுமார் இயக்கத்தில் ‘போராளி‘ படத்தில் நடித்தவர் அபிநயா. வாய் பேசாத காது கேட்காத மாற்றுத்திறனாளி. படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்பேர் விருது கிடைத்தது. தெலுங்கிலும் இப்படத்தில் அபிநயாவே நடித்தார். அதற்கும் விருது பெற்றார். தொடர்ந்து ‘ஈசன்‘, ‘7ம் அறிவு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஹரி இயக்கத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘பூஜை‘ படத்தில் மற்றொரு நாயகியாக அபிநயா நடிக்கிறார்.பிற மொழிப் படங்களிலும் நடித்து வரும் அபிநயா மலையாளத்தில் ‘ஐசக் நியூட்டன் சன் ஆப் பிலிபோஸ்‘ என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பஹத் பாசில் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த பிஸி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று எலக்ஷன் பாணி யில் கோஷம் போடுகிறது அபிநயாவின் நட்பு வட்டாராம்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: