வில்லி
வேடத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் பிரியாமணி.தமிழ், தெலுங்கு, மலையாள
படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார் பிரியாமணி. இளம் ஹீரோயின்களின் வரவால்
அவருக்கு வாய்ப்பு குறைந்தது. கடந்த ஆண்டு தமிழில் நடிக்க வந்த
வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதற்கிடையில் இந்தி மோகம்
ஏற்பட்டது. அதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார். ஷாருக்கான் நடித்த
‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படத்தில் குத்தாட்டம் ஆட மட்டுமே வாய்ப்பு வந்தது அதை
ஏற்றார். பட வாய்ப்புகள் டல்லடிக்க தொடங்கியதால் விரக்தி அடைந்தார்.
இதையடுத்து
ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்று பிடிவாதமாக இருந்த பிரியாமணி திடீரென்று
பாலிசியை மாற்றிக்கொண்டிருக்கிறார். வில்லி வேடம் வந்தாலும் நடிக்க தயார்
என்று கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘நடிப்பில் பல விதமான
பரிமாணங்களை ஏற்று பரிசோதனை செய்துபார்க்க விரும்புகிறேன். பிரபல
ஹீரோவுக்கு வில்லியாகவும் நடிக்க விரும்புகிறேன்’ என்றார். - See more at:
tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக