தே.மு.தி.க., போட்டியிடும், 14 தொகுதிகளின் வெற்றி
வாய்ப்பு குறித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், ரகசிய 'சர்வே'
எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சர்வேயை பார்த்து அதிர்ச்சி
அடைந்துள்ள, அவர், கட்சி நிர்வாகிகளுக்கு கண்டிப்பான
உத்தரவிட்டிருக்கிறார்.வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,
கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதா அல்லது பா.ஜ., கூட்டணியில் இணைந்து
போட்டியிடுவதா என்கிற கடுமையான குழப்பம், தே.மு.தி.க., கட்சி வட்டாரத்தில்
வெகுநாட்களாக நிலவியது. குறிப்பாக, கட்சித் தலைவர் விஜயகாந்தின் மச்சான்,
'தி.மு.க.,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும்' என, விடாப்பிடியாகச் சொல்ல,
அதற்கு நேர் மாறான சிந்தனையில் இருந்தார், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. அதாவது அஞ்சி தொகுதியில மட்டும் டெப்பாசிட் கிடைக்கும் மத்த தொகுதியில
டெப்பாசிட் கூட கிடைக்காதின்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி
சொல்லிடாங்க..உண்மை நெலவரத்த சொன்னா கேப்டன் இன்னும் டென்சன் ஆகி
இருப்பாருன்னு அந்த சர்வே குழுவினருக்கு தெரியாதா என்ன...
ஒரே மேடையில் பா.ஜ.,வோடு கூட்டணி சேருவது தான், கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என சொல்லி, அவர் விஜயகாந்தை தொடர்ந்து வலியுறுத்த, அதன்படியே முடிவெடுத்து, பா.ஜ., கூட்டணியில் இணைந்தார், விஜயகாந்த்.பா.ஜ., கூட்டணியில் திருவள்ளூர் (தனி), வட சென்னை, மத்திய சென்னை, விழுப்புரம் (தனி), கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கரூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல் என, 14 தொகுதிகளை பெற்று, தே.மு.தி.க., போட்டியிடுகிறது.தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து, கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர், தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, சில தொகுதிகளில் தே.மு.தி.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார்.
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், சேலத்தில், தே.மு.தி.க.,வின் 14 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
தே.மு.தி.க., போட்டியிடும் 14 தொகுதிகளிலும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என அறிய விரும்பினார் விஜயகாந்த். அதற்காக, அவர் ஒரு ரகசிய சர்வே எடுத்துள்ளார்.தனியார் கல்லூரி மாணவர்கள், விஜயகாந்த் கட்சியின், 'டிவி' குழுவினர் மற்றும் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து, இந்த சர்வேயை நடத்தி முடித்துள்ளன.இதில், குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளில், தே.மு.தி.க.,வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக, விஜயகாந்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்ற தொகுதிகளில், பிரசார வியூகத்தையும், தேர்தல் பணியையும் விரைவுபடுத்தினால், வெற்றி கோட்டை தொட முடியும் என்றும் கூறியுள்ளனர்.
ஆறு தொகுதிகளில், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறைவாக இருப்பதாகவும் அங்கெல்லாம் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் செலவுக்கு பணம் இல்லாமல் தடுமாறுவதாகவும் விஜயகாந்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இப்படி சர்வே முடிவுகளின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை தகவல்களையும் வைத்துக் கொண்டு, தினமும் இரவு நேரத்தில் போன் போட்டு, நிர்வாகிகள் பலரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.
அடுத்தடுத்து, கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தெல்லாம், தெளிவாக சொல்லும் அவர், நான் சொல்லும் விஷயங்களை நீங்கள் ஒழுங்காக செய்கிறீர்களா இல்லையா என பார்ப்பேன். அதன்பிறகும் கட்சி தோற்குமானால், உங்களுடைய பதவி பறிக்கப்படும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள் எனவும் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்.இதனால் நிர்வாகிகள் பலரும், அதிர்ந்து போய், குறிப்பிட்ட சில தொகுதிகளில் வேக வேகமாக பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக தே.மு.தி.க., வட்டாரங்களில் கூறியதாவது:சர்வே முடிவுகளைப் பார்த்ததும், விஜயகாந்த் கடுமையாக கோபமடைந்து விட்டார். இருந்தாலும், குறிப்பிட்ட தொகுதிகளில் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். அதனால், பணிகளில் இருந்த தொய்வு குறைந்துவிட்டது. அதனால், சர்வேயில் கட்டாய வெற்றி என சொல்லியிருக்கும் தொகுதிகளையும் தாண்டி கட்சி வெற்றி பெறும்.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் கூறினர்.
- நமது நிருபர் - dinamalar.com

வெற்றி வாய்ப்பு

தோற்குமானால்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக