அண்ணாசாலையில் அலுவலகத்தை கொண்டிருந்தாலும்,
விகடன் குழுமத்தின் ஆன்மா கமலாலயத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆன்ம
மாற்றத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த விவரங்களை நாம் அறியோம். அதனால் என்ன,
ஒரு மாதத்தில் அவை தானே வெளியே வரும்.
தமிழகத்தில் பா.ஜ.க-வின் அதிகார பூர்வ ஏடுகளின் நம்பர் ஒன்னான ஜூனியர் விகடனின் 27.4.14 தேதியிட்ட “தேர்தல் கணிப்பு ஸ்பெஷல்” வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாக செவ்வாய்க் கிழமை அன்றே கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி செவ்வாய்க் கிழமை மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் சட்டத்துக்கு கீழ்ப்படிந்தாக வேண்டும். சட்டத்திறகு கீழ்ப்படிந்தாலும் தாமரை மலர மானம் கெட்டு தண்ணீர் ஊற்றும் வேலையையும் விட்டு விட முடியாது. இதனாலேயே செவ்வாய்க்கிழமை அன்றே விகடன் குழுமத்தினர் பா.ஜ.க-வுக்கான தமது இறுதி பிரச்சார அறிக்கையை வாசகர்களின் கைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்; கூடவே மோடிக்கான பிரச்சாரத்தை மனதில் ஊறப் போட்டு நல்ல முறையில் வாக்கு போட வாசகர்களுக்கு அவகாசம் கொடுக்கிறார்களாம்.
முக்கியமாக வாசகர்களுக்கும், அவர்கள் மூலமாக தமிழ் மக்களுக்கும் விகடன் நரிக் குழுமம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் செய்தி : “இது நாடாளுமன்றத் தேர்தல்” என்பது. மேலோட்டமாக பார்த்தால் இது அறிவுப்பூர்வமான விசயமாயிற்றே என்று தோன்றும். அதுதான் நரிகளின் பலம். அதாவது இந்த தேர்தலை தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்குமான போட்டி, திராவிட இயக்க குழாயடிச் சண்டை என்று நினைத்து வோட்டு போட்டு விடாதீர்கள். மத்தியில் ஊழல் மக்கள் விரோத காங்கிரசை விரட்டி மாற்று ஆட்சியை ஏற்படுத்த பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்ற தமிழ்நாடு பா.ஜ.கவின் கோயாபல்ஸ்சுகள், பிரச்சாரங்களில் தவறாமல் சொல்லி வந்த செய்திதான் விகடனது வாசகருக்கான நீதி.
இப்படி அப்பட்டமாக காவி நீதியை தனது முழக்கமாக ஏற்றுக் கொண்டிருப்பதிலிருந்து காவிகளின் சித்தம் விகடன் சீனிவாசக் கண்ண திருமாவேலன்களின் பாக்கியம் என்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.
இந்த மானங்கெட்ட மாமா வேலையில், இருட்டு அறை அரசியல் கிசுகிசுக்களின் பெரிய மாமாவான மிஸ்டர் கழுகுவின் “குசு குசு”வாக முதல் பக்கத்திலேயே ஆரம்பமாகிறது.
மோடி, சோனியா காந்தி, மற்றும் பா.ஜ.க மத்திய தலைவர்களின் பிரச்சாரம் ‘இது நாடாளுமன்ற தேர்தல், அதற்கு ஏற்ப வாக்குகளை அளிக்க வேண்டும்’ என்ற சிந்தனையை படித்த வாக்காளர்கள், நகர்ப்புற மக்கள் மத்தியில் விதைத்து விட்டது. என்று தமிழ் மக்களின் நாடித்துடிப்பை வதைத்துக் கொண்டிருக்கும் கழுகனே சொல்லி விடுகிறான். காவி சாயத்தை கழுகு வாந்தியெடுத்தால் அதற்கு அப்பீல் உண்டா என்ன?
மேலும், ‘ஜெயலலிதா மோடியை செல்லமாக விமர்சித்தது அவருக்கு பலனளிக்கப் போவதில்லை, அதனால் அவர் மோடி பிரதமராக ஆதரவு தருவார் என்று நினைத்திருந்த இந்துத்துவாக்கள் ஓட்டு போட மாட்டார்கள், அவர் எதிர்பார்த்த வகையில் சிறுபான்மை மக்களும் ஓட்டு போட மாட்டார்கள்’ என்று ஆய்வு செய்து பா.ஜ.கவுக்கு எதிராக அ.தி.மு.க பலவீனப்பட்டு நிற்கிறது என்று நிறுவுகிறார்கள். அதாவது, இந்துத்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்காமல் மோடியின் பையில் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பதுதான் விகடனது வெறி கலந்த விருப்பம். இதை நல்லதொரு அறிவுப்பூர்வமான ஜனநாயக கடமை என்று வாசக கோயிந்துகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, தலைவர்களின் இறுதிக் கட்ட பிரச்சாரம் என்ற தலைப்பில் காங்கிரசின் ராகுல் காந்தி அசாமில் பிரச்சாரம் செய்தது, அ.தி.மு.கவின் ஜெயலலிதா திருவல்லிக்கேணியில் பேசியது, பா.ஜ.கவின் ராஜ்நாத்சிங் தமிழகச் சுற்றுப்பயணத்தில் ‘கர்ஜித்தது’, தி.மு.கவின் ஸ்டாலின் திருச்சியில் பிரச்சாரம் ஆகிய செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் துணைத் தலைப்பாக பெரிய எழுத்துக்களில் “இது நாடாளுமன்ற தேர்தல்” என்று ராஜ்நாத் சிங் பேசியதாக அவர்களது மற்றும் பாஜக தமிழக தலைவர்கள் பேசிவரும் கருத்தை சொருகியிருக்கிறார்கள். தாமரைக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று திரும்பத் திரும்ப வேறு வேறு தலைப்புகளில், செய்திகளில், அலசல்களில், அக்கப்போர்களில் நச்சரிக்கிறார்கள்.
“வாரியா” என்று தெருவோரத்தில் நின்று கொண்டு விபச்சாரத்திற்கு அழைக்கும் தெருப்பொறுக்கி மாமாக்களுக்கும் இந்த ஊடக பொறுக்கி மாமாக்களுக்கும் என்ன வேறுபாடு? இப்பேற்பட்ட மாமா விகடன், ராஜ்நாத் சிங், தஞ்சை திலகர் திடலில் காலி நாற்காலிகளோடு பேசிய அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டத்தை படத்தோடு ஏன் வெளியிடவில்லை? மோடி அலையின் உண்மையான இலட்சணமே அதுதானே!
கழுகின் காவி ரசாயன சிட்டுக்குருவி லேகிய பதில்கள், மோடியுடன் ரஜினி இருக்கும் புகைப்படத்துடன் ஆரம்பமாகிறது. “தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் வித்தியாசம் இல்லை” என்று மோடி சொன்ன செய்யுளுக்கு செல்வகணபதியை சான்றாக எடுத்துக் கொண்டு விசக் கழுகு பொழிப்புரை எழுதியிருக்கிறது. காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வேறுபாடு இல்லை என்று எடியூரப்பாவையும், சுரேஷ் கல்மாடியையும் வைத்து இப்படி ஒரு பதில் எழுதுமா அந்த மானங்கெட்ட கழுகு?
இல்லை, கார்ப்பரேட்டுகளுக்கு தரகு வேலை பார்ப்பதில் காங்கிரசை விஞ்சும் மோடிக்கும் காங்கிரசு பெருச்சாளிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்று அதானி குழுமத்தை சான்றாகக எடுத்துக் கொண்டு உபதேசிப்பார்களா இந்த கமலாலயத்திற்கு வாக்கப்பட்ட நரிகள்? பா.ஜ.கவின் உப்பைத் தின்னும் நரிக் கழுகுகள் அதை எக்காலத்திலும் செய்யப் போவதில்லை.
அடுத்த கேள்வியில் ரஜினி வீட்டுக்கு மோடி சென்றதால் மனம் புண்பட்ட இந்துத்துவா போக்கிரிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் வகையில், அதையே மோடியின் பெருந்தன்மையாக மாற்றிக் காட்டுகிறார் கழுகு பெயரில் இருக்கும் கேடி. அதாவது ‘என்னுடைய நண்பரை அவரது வீட்டுக்குப் போய் சந்திப்பதை எந்த புரோட்டோகால் தடுக்க முடியும்’ என்று மோடி கேட்டாராம். பிரதமர் வேட்பாளர் என்று இந்திய அரசியல் அமைப்பிலேயே இல்லாத ஒரு பதவிக்கு புரோட்டா காலும் இல்லை சால்னா காலும் இல்லை என்று வாசகர்களுக்கு தெரியவா போகிறது என்ற அலட்சியத்தோடு மோடி ரஜினியின் வீட்டில் வாலாட்டி கால் நக்கி நின்றதற்கு கௌரவ முலாம் பூசியிருக்கிறது கழுகு.
அடுத்து “மோடி பற்றி ரஜினி கூறியவை ஓட்டுகளாக மாறுமா” என்று ஈரோட்டின் ரேவதிப் பிரியனின் அக்கறைக்கு கர்ம சிரத்தையாக பதிலளிக்கிறார்கள். ரஜினி வீட்டிலிருந்து கிளம்பி மீனம்பாக்கம் கூட்டத்துக்கு மோடி காரில் போகும் போது, பா.ஜ.க பிரமுகர் மோகன்ராஜூலு, லதா ரஜினிக்கு போன் செய்தாராம், உடனே போனை வாங்கிய ரஜினி சொன்னதாக பா.ஜ.க பிரச்சாரம் செய்யும் திரைக்கதையை தனது வாசகர்கள் நம்பியே ஆகவேண்டுமென்று அடித்து விடுகிறார்கள். இதற்கு தினமும் மோடியும், ரஜினியும் காலையில் செல்பேசியில் குசலம் விசாரித்து விட்டுத்தான் ஒன்றோ, இரண்டோ போவார்கள், இல்லையெனில் போகாது எனுமளவு நட்பு என்று எழுதலாமே!
அடுத்து தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.கவில் சேர்ந்த நடிகர் பற்றிய கேள்வியை வைத்து “கருணாநிதிக்கு இந்த அவமானம் தேவையா” என்று பூணூலை உருவிக் கொண்டு வக்கரிக்கிறது கழுகு. ரித்தீஷ் விலகியதால் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் அவமானம் என்று பெயர் குறிப்பிட்டு அலுத்துக் கொள்ளும் ஜூவி, ‘மன்னார்குடி சொந்தத்திடம் வேலை பார்த்த… வெளிநாட்டுக்கு ஓடிப் போன… கைது செய்ய தேடப்பட்ட….“ ரிதீஷை சேர்த்துக்கொண்ட கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மட்டும் அவமானமில்லையா என்று ஏன் கேட்க துப்பில்லை? இந்த கோழைத்தனத்தை மறைக்கத்தான் “எல்லாம் தெரிந்த அரசியல் தலைவர்களுக்கு எதுவுமே தெரிவது இல்லை” என்று வேதாந்தம் பேசி வேசித்தனத்தை மறைக்கிறது கழுகு.
இறுதி பஞ்சாக, முதன்முறையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களுக்கு அறிவுரை கேட்கும் கேள்விக்கு, “இது நாடாளுமன்ற தேர்தல் என்பதை மனதில் வையுங்கள்” என்று பாஜக இல கணேசனின் முழக்கத்தைச் சொல்லி முடித்திருக்கிறார்கள். சரி முதன்முறையில் வாக்களிப்பவர்கள் மோடிக்கு அளியுங்கள் என்று நேரடியாக சொல்ல முடியாமல் நடுநிலைமைக்காக இவர்கள் ரொம்ப மெனக்கெடுகிறார்களாம், அய்யோ பாவம், அடி செருப்பால!
அடுத்த 3 பக்கங்களுக்கு “காங்கிரஸ் துரோகத்தை பி.ஜே.பி செய்யாது” என்ற தலைப்புடன் திராவிட இயக்கத்தின் துரோகி, இந்து மத வெறியர்களுக்கு குடை பிடிக்கும் கருப்பு சட்டை போட்ட காவி பாதம் தாங்கி வைகோவின் பேட்டி. அவரை துவைத்து எடுக்கும் விமரிசனங்களுக்கு சமாதானம் சொல்லும் நோக்கில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ‘தமிழ் ஆதரவு நண்பர்கள்’ எல்லாம், அண்ணன் வைகோவின் திருநாமத்தை பஜனை செய்து கொண்டே இந்துத்துவா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் மெசேஜ்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் ராஜபக்சேவிடம் நெக்லஸ் வாங்கி வந்த சுஷ்மா சுவராஜ், ராஜபக்சேவை சாஞ்சிக்கு வரவழைத்து பூஜை செய்த சிவராஜ்சிங் சௌகான், ராஜபக்சேவின் புரோக்கராக வேலை செய்யும் சுப்பிரமணியசாமி இவர்களின் கட்சியான பா.ஜ.கவிடம் சரணடைந்துள்ள வெட்கங் கெட்ட அரசியல் அனாதை வைகோவின் சமாதானங்களை பெரிய அரசியல் கோட்பாடுகளாக கடை விரித்திருக்கிறது ஜூவி.
‘பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்று சொன்ன எச் ராஜாவையும், பெரியாருக்கு சவால் விட்ட சி.பி.ராதாகிருஷ்ணனையும் தேர்தலில் நிறுத்தியுள்ள பா.ஜ.கவின் கூட்டணியில் அவர்களுக்கு பிரச்சாரம் செய்யும் மானங்கெட்ட துரோகி வைகோ, பா.ஜ.க பெரியாரை மதிப்பதாகவும், மோடி சிறுபான்மையினரை பாதுகாப்பதாகவும் கூசாமல் புளுகியிருக்கிறார். குஜராத்தில் சொத்து வாங்கும் முஸ்லீம் வணிகர்கள் கூட இந்துத்துவா வெறியர்களால் வெளிப்படையாக மிரட்டப்படுகிறார்கள் என்பது ஊடகங்களில் அம்பலப்பட்டு நாடு முழுவதும் சந்தி சிரிக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பற்றியும், கிரேக்க வரலாற்றையும் நெப்போலியனின் வீரதீரங்களையும் ஆய்வு செய்து கரைத்து குடித்தது போல உதார் விடும் இந்த பெருச்சாளி, “குஜராத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்கிறார்கள்” என்று பேசுவதற்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? அதை மறைக்க திருமாவேலனும், ஜூனியர் விகடனும் எப்படியெல்லாம் எழுதுகிறார்கள். இனி கோயாபல்ஸ் என்றால் திருமாவேலனைத்தான் குறிப்பிட வேண்டுமென்று விக்கிபீடியாவில் விதி கொண்டு வர வேண்டும்.
இவ்வாறாக பா.ஜ.கவுக்கு ஊடக அடியாளாக வேலை செய்ததோடு, கடந்த மூன்று மாதங்களாக பா.ஜ.க கூட்டணிக்கு தமிழ்நாட்டில் இல்லாத ஆதரவை எழுப்பிக் காட்டும் அற்புதத்தை நடத்திக் கொண்டிருந்த ஜூ.வி, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது முதுகை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் சில முன் தயாரிப்புகளை செய்திருக்கிறது.
முதலாவதாக, மிஸ்டர் கழுகு பகுதியில் அ.தி.மு.கவின் அதிகார துஷ்பிரயோகம் பற்றி கழுகார் கவலைப்படுகிறார். காவல் துறையினரின் தபால் ஓட்டுக்களை வாக்குப்பெட்டியில் போடுவதற்கான ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்து விடுமாம், கடைசி இரண்டு நாட்களில் பரவலாக அதிகார மீறல்கள் நடந்து விடும் என்று எச்சரிக்கிறார். இரண்டரை ஆண்டுகளாக கொடி கட்டிப் பறக்கும் அ.தி.மு.கவின் அதிகார மீறல்களைப் பற்றி திடீரென்று “கிசுகிசு” புகழ் கழுகு மாமாவுக்கு அக்கறை பிறந்திருப்பது மோடி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமும், புதிய மத்திய அரசின் ஆதரவும் செய்த மாயம் என்பதே உண்மை.
மேலும், சென்ற இதழ் வரை தமிழ்நாட்டில் மோடி பிரதமராக 50%-க்கும் மேல் மக்கள் ஆதரவு, பா.ஜ.க. கூட்டணிக்கு 28.75% பேர் வாக்கு, அ.தி.மு.கவுக்கு 26.4% வாக்கு, தி.மு.கவுக்கு 17.51% என்று அடித்து விட்டுக் கொண்டிருந்த ஜூ.வி, இப்போது தொகுதிவாரியான கணிப்பில் அ.தி.மு.கவுக்கு 15 தொகுதிகள், தி.மு.கவுக்கு 14 தொகுதிகள், பா.ஜ.க கூட்டணிக்கு 10 தொகுதிகள் என்று பல்டி அடிக்கிறது.
அது வேற வாய், இது நாறவாய், இரண்டுமே அழுகி நாறும் வாய் என்றுதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களாக பெண்கள், இளைய வாசகர்கள், கிராமத்தினர், சிறுபான்மையினர் என்று அனைத்து தரப்பிலும் பா.ஜ.க கூட்டணிக்கும், மோடிக்கும் மகத்தான ஆதரவு என்று மோசடி சர்வேக்களை வெளியிட்டு வாசகர்களை முட்டாளாக்கி வந்த ஜூ.வி தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்காலத்தில் மக்களின் செருப்படியை தவிர்ப்பதற்கு இப்படி ஒரு கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதாவது 28.75% = 10 சீட்டுகள் (பா.ஜ.க)
26.4% = 15 சீட்டுகள் (அ.தி.மு.க)
17.51% = 14 சீட்டுகள் (தி.மு.க)
பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் அதிகம் பெற்று முதலில் வருபவருக்கு வெற்றி என்ற இந்த போலி ஜனநாயகத்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையில் 28.75% வாக்குகளை பெற்று முதல் இடத்தில் வரும் ஒரு கூட்டணி மும்முனை போட்டியில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளையும் ஸ்வீப் செய்யும் என்பதுதான் நிதர்சனம். ஆனால், ஜூ.வி அதற்கு நேர்மாறாக 14 சீட்டுகள் என்று கணித்திருக்கும் தி.மு.கவை 17.5% மக்கள் மட்டும் ஆதரிப்பதாக 25,000 பேரைச் சந்தித்து எடுத்த சர்வேயில் தெரிய வந்ததாக கூறியிருந்தது. அந்த சர்வேயில் மோடி பிரதமராக 50% பேர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறியிருந்தது எந்த அடிப்படையில் என்று வாசகர்கள் செருப்புக்களையும், துடைப்பக்கட்டைகளையும் எடுத்துக் கொண்டு விகடன் அலுவலகத்திற்கு போய் கேட்டால்தான் தெரிய வரும்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி பெறப்போகும் தொகுதிகள் மூன்றென ஆங்கில ஊடகங்களும், ஐந்தென ஏனைய தமிழ் ஊடகங்களும் கணித்துள்ள நிலையில் 30 அல்லது 40 என்று எழுத ஜூவிக்கு சிரமமாக இருக்கிறது. எடுத்த சர்வேயே கீ போர்டு மோசடி எனும் போது சீட் ரிசல்ட்டில் மட்டும் எப்படி மோசடியை குறைப்பது? இதுதான் தற்போது சாமர்த்தியமாக 10 என்று எழுதியிருக்கிறார்கள். இதில் ஐந்து இவர்களது போனஸ் தொகுதிகள் என்பது மற்ற தமிழ் ஊடக சர்வேக்களைப் பார்த்தால் புரியும். சரி, இரண்டு மூன்றுக்கு பத்து என்று எழுதினால் கூடுதலாக மக்கள் அதுவும் ஜூவி வாங்கும் கோயிந்துகள் வாக்களிக்க மாட்டார்களா என்று நப்பாசை!
இந்த கிரிமினல் வேலைகளை எந்த திராவிட இயக்க வட்டச் செயலாளரோ இல்லை அமைச்சர்கள் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அண்ணாசாலை, கமலாலய காம்பினேஷனில் சதித்திட்டங்களெல்லாம் என்னமாக பிய்த்து உதறுகிறார்கள். அதிலும் திருமாவேலனின் மனங்கவர்ந்த வைகோ கட்சிக்கு நான்கோ, ஐந்தோ வெற்றி என்று போட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்து ஐந்து வாக்குகள் கூட மதிமுகவிற்கு விழாது என்பதே அரசியல் நிலைமை.
இந்த இதழின் இறுதிப் பகுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சுப தங்கராசுவின் தேர்தல் புறக்கணிப்பு குறித்த ஒரு பக்க பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். இத்தனை தகிடுதத்தங்களையும் எழுதி விட்டு பிராயச்சித்தம் போல இப்படி ஒரு உத்தி. அதாவது மோடிக்கு கொடி பிடித்தாலும், தேர்தல் புறக்கணிப்பிற்கு ஒரு பக்கத்தை ஒதுக்க மறக்கவில்லையாம். அதை வைத்து புரட்சிகர அமைப்புகளை மதிக்கும் மக்களிடம் மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஜூவி சொல்வது சரிதான் என்று ஒரு கருத்து உருவானால் இலாபம் தானே? ஆனால் ஜூவியை மட்டும் படிக்கும் கோயிந்துகளைத் தவிர வேறு எவரும் அப்படி தங்களது அறிவை அடகு வைக்க மாட்டார்கள்.
ஊடகங்கள் அனைத்தும் இப்படி பகிரங்கமாக மோடிக்கு ஆதரவாக சதித்தனத்துடன் இயங்கி வரும் நிலையில் பாஜகவின் ஆட்சி வந்தால் எப்படி இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இனி விகடன் குழுமத்தை பாஜகவின் ஊடக அணி என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம். இல்லை கூச்சமாக இருந்தால் விளம்பர மாமா அணி என்று கொஞ்சம் ஃபேஷனாக கூட வைக்கலாம்.
- செழியன். vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக