புதன், 23 மே, 2012

Mohan Lal:கேரளாவில் வசிப்பதற்கே பயமாக உள்ளது

 
கோழிக்கோடு:கேரளாவில் வசிப்பதற்கே தனக்கு பயமாக இருப்பதாகவும், அம்மாநிலம், பைத்தியக்காரர்களின் வாழ்விடமாக மாறி வருகிறதோ என, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அச்சம் தெரிவித்துள்ளார். 
 அது சரி சேட்டா பட்சே திலகன் சாருக்கு நீங்கள் செய்த துரோகம் சரியாணு? அது மகா பாவமல்லே சாரு அது குறிச்சும் சம்சாரிக்கணும் சாரே
பிரபல மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால். இவர் தமிழ், இந்தி, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகளை குவித்துள்ள இவர், இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கர்னலாகவும் இருந்து வருகிறார். இவரது தாய் சாந்தகுமாரி மூளையில் ஏற்பட்ட அடைப்பால் மூன்று மாதமாக, சிகிச்சை பெற்று வருகிறார்.தாயின் அருகில் இருந்து கவனித்து வருகிறார் மோகன்லால். இந்நிலையில், கோழிக்கோடு அருகே ஒஞ்சியம் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, டி.பி.சந்திரசேகரன் என்பவர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், மே 21 ல், தன், 52வது பிறந்த நாளை மோகன்லால் கொண்டாடவில்லை.
அதற்கு அவர், "த கம்ப்ளீட் ஆக்டர்' என்ற வலை தளத்தில், தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:எனக்கு ஒரு கஷ்டம் வந்தால், என் தாயின் மனது துடிப்பதை என்னால் உணரமுடியும். சிறிய காயம்பட்டாலும், துடித்துப்போகும் என் தாயைப் போலத்தானே, உடலில் பல வெட்டுக்காயங்களை பெற்று கொலையான சந்திரசேகரனின் தாயின் மனதும் துடித்துப் போயிருக்கும்.

அந்தத் தாயின் கண்ணீர் கடலில், என் பிறந்தநாள் கொண்டாட்டம் மூழ்கி விட்டது. சந்திரசேகருடன் எனக்கு பழக்கமில்லை. இருந்தாலும், அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், கிட்டத்தட்ட என்னுடைய வயது தான் அவருக்கும் இருந்திருக்கும். அவருடைய தாய்க்கும் எனது தாயின் வயது தான் இருக்கும்.கொலை செய்ய தூண்டுபவர்களும், கொலை செய்பவர்களும் அதிகரித்து வரும் கேரளாவில் வசிப்பதற்கே எனக்கு தயக்கமாகவும், அச்சமாகவும் உள்ளது. பைத்தியக்காரர்களின் மாநிலமாக, கேரளா மாறி வருகிறதோ என, எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறு மோகன்லால் வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Pannadai Pandian - wuxi,சீனா
2012-05-23 05:54:43 IST Report Abuse
மோகன்லால் அவர்களே, மலையாளிகள் கொலையாளிகள் என்ற வாசகம் சும்மா உதிர்ந்து விட வில்லை. அது அனுபவத்தால் வந்தது. நீங்கள் உடலில் காயம்பட்டு இறந்தவரை பற்றி இங்கு கூறுகிறீர்கள். அதே சமயம் உலகெங்கும் உள்ள மலையாளிகள் மற்ற இனத்தவரின் மனதை காய படுத்தி விட்டு சதிவேலைகள் பல செய்து அவர்களின் வாழ்வாதாரமான வேலைக்கும் உடமைக்கும் மன உளைச்சலுக்கும் பாதகமான காரியங்கள் பல செய்து விட்டு ஏய்ச்சி பிழைக்கிறார்கள். அப்படி காரணமாய் அமைந்து விட்டவர்களை ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை ? தயவு செய்து மலையாளிகளின் செயல்களை வெளிப்படையாக கண்டியுங்கள்.
 
போய் புள்& - kakkoos,போசினியா
2012-05-23 05:24:54 IST Report Abuse
ஆலோ லாலு சேட்டன் இதுக்கே இப்படியா? இங்கே நம்ம தமிழ் கொலை நாட்டுல கடந்த ஒரு வருடமா நடக்றத பாத்து நீங்க சந்தோஷ படுங்க இங்கே தினம் பத்து கொலை நடக்குதுஅதில் அஞ்சுதான் வெளியே தெரிய வரும்,அதிலும் ரெண்டுதான் நடந்ததா ஜால்ரா மலர் சொல்லும் இந்த பதில் அஞ்சு கேஸ் போலிஸ் துணையோட மூடப்படும் குறிப்பா பெரிய மனுசங்களை கொல்லனும்னா போலிசே துணை போகும்அப்புறம் "இன்றைய கொலைகள்", "இன்றைய கொள்ளைகள்"நு போடற அளவுக்கு தினம் இங்கே கொடுமை நடக்குது,இதையெல்லாம் பாத்து நீங்க உங்க ஊரே பரவா இல்லைன்னு சந்தோஷ படனும்,புரிதா?
 
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
2012-05-23 05:04:47 IST Report Abuse
எப்படிங்க கரெக்டா கண்டிபிடிசீங்க சேட்டா? நீங்க சொன்ன அதே வார்த்தை தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் போல தெரிகிறது. நடிகரை ரத்த சொந்தமா கொண்டாடுறாங்க, ஒரே பால் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம். ஒரு வார்த்தை கூட தப்பா பேச முடியாது. அடிச்சே போடுவாங்க. அதே மாதிரி நடிகையை அம்மாவுக்கும் மேல தெய்வத்துக்கும் மேல. ஒரு வார்த்தை கூட நீங்க விமர்சிக்க முடியாது. ஆனா பிள்ளைகளால் வெளியில் துரத்தப்பட்ட பெற்றோர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. முதியோர் அநாதை இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது

கருத்துகள் இல்லை: