வியாழன், 24 மே, 2012

அரவிந்தர் ஆசிரம ஆரோவில்லில் ஆபாசக் கூத்து

  ஆன்மீக நகரம் என்ற தலைப்பில், புதுவை அருகே தமிழக எல்லைக்குள் இருக்கும் ஆரோவில் நகரில் நடக்கும் ஆபாசக் கூத்துகளை நக்கீரனில் தோலுரித்துக் காட்டியிருந்தோம்.
இதைக் கண்டதும் காவல்துறை உஷாரானது. வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணப்பன், ஏரியா முழுக்க விசிட்டடித்து, இல்லீகல் பார்களையும் டிஸ்கொதே கிளப்புகளையும் வார்ன் பண்ணி னார். இதன்பின் கொஞ்ச நாள், ஆரோவில் அமைதியாக இருந்தது. இந்த நிலையில்... ’மீண்டும் ஆட்டங்கள் ஆரம்பித்துவிட்டன’ என்ற தகவல் நம் காதுக்கு வர, 19-ந் தேதி மாலை கிழக்குக் கடற்கரை சாலையைப் பிடித்தோம். பெரிய முதலிச் சாவடியிலிருந்து மேற்காகச் செல்ல, ஆரோவில் எதிர்ப்பட்டது. வித வித காஸ்ட்லி கார்களும் டூவீலர்களும் அந்த ‘மேங்கோ கில் ரெஸ்ட்டாரென்ட்’முகப்பில் நிற்பதைக் கண்ட நாம், கஸ்டமர் போல் அங்கே சென்றோம்.
புதுவை அரவிந்தர் ஆசிரம ஆரோவில்லில் "என்ட்ரன்ஸ் பீஸ் 300 கொடுங்க'’என்றனர். பணத்தைக் கொடுத்ததும், புதுவையில் மட்டுமே விற்கவேண்டிய டின் பீர் ஒன்றை, அன்பளிப்பாக நம் கையில் திணித்தனர். உள்ளே நமக்கு ஜிலீர் எனக் கதவு திறந்தது. அங்கே சென்னை, கோவை, சேலம், விழுப்புரம், மதுரை, சிதம்பரம் என தமிழகத்தின் சகல பகுதிகளில் இருந்தும் கல்லூரி இளைஞர்-இளைஞிகள் குவிந்திருந்தனர். ஃபாரின் முகங்களும் தென்பட்டன. கல்லூரி ஜோடிகள், காதல் ஜோடிகள், கல்யாணமான ஜோடிகள் என ஜோடிகளுக்கும் பஞ்சமில்லை.

பெண்கள் கூச்சமில்லாமல் ஒரு கையில் பீரையும் இன்னொரு கையில் சிகரெட்டையும் வைத்துக்கொண்டு கண்கிறங்கி நின்றனர். கொஞ்சம் தள்ளியிருந்த நீச்சல் குளத்துக்குப் போன நாம் அதிர்ந்து நின்றோம். அதன் கரையில் வாட்ட சாட்டமான ஒரு இளம்பெண், மேலாடை யில்லாமல் ஹாயாய் நிற்க, அவளுக்கு இரண்டு புறமும் நின்றுகொண்டிருந்த இளை ஞர்கள் எல்லை மீறிக்கொண் டிருந்தார்கள். போதாக் குறைக்கு "ப்ளீஸ் கமான் மேன். வா.. வந்து என்ஜாய் பண்ணு'’என அந்தப் பெண், கஞ்சா ஏற்றிய போதையில், கடந்துபோகும் இளைஞர்களை கெஞ்சலாய் அழைக்க வேறு செய்தாள்.


நீச்சல் குளத்தின் பக்கவாட்டுகளில் லைட் பளீர் என எரிந்தது. அந்த பளீர் தண்ணீரில் பெண்களை ஆண்கள் முற்றுகையிட்டனர். ஜோடி ஜோடியாய் இறங்கியவர்களும் ஆள் வித்தியாசம் இன்றி, நீச்சல் குளத்திலேயே தங்கள் ஜோடிகளை மாற்றிக்கொள்ள அட கர்மமே என்று கொஞ்சம் நகர்ந்தோம்.


கொஞ்சம் விலகி நடந்த நாம் திடுக் கிட்டோம். இது கனவா? நனவா? இது தமிழ்நாடுதானா? என திகைத்தோம். காரணம் இரண்டு இளம்பெண்கள், தங் கள் உடைகளை முழுதுமாகக் களைந்து விட்டு காற்று வாங்கிக்கொண்டிருந்தனர். அடக்கொடுமையே என வேறுபக்கம் திரும்பினோம். அங்கே ஒரு கூட்டம் குத் தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது. ஆடிய ஆண்களும் பெண்களும் சகட்டு மேனிக்கு மாறி மாறி கட்டிப்பிடித்துக் கொண்டும் தழுவிக்கொண்டும் ஆடினர். இடையிடையே கஞ்சாப் பொட்டலத்தை பிரித்து சிகரெட்டுக்குள் திணித்துக் கொண்டு உறிந்தனர்.


ரொம்பவும் கிக்கான ஜோடிகள், லேசான இருட்டுப்பகுதியை நோக்கி ஒதுங் கின. மீண்டும் நீச்சல் குளத்தின் பக்கம் வந்தோம். டீம்கள் மாறியிருந்தன. அதே ஆபாசக் கூத்துக்கள்தான். அப்போது ஒரு இளம்பெண், நீச்சல் குளக்கரையில் நின்ற படி தன் கீழாடையை முட்டிக்கால் வரை இறக்கி திகிலூட்டிவிட்டு மேலேற்றினாள்.. அதைப் பார்த்து ஜிவ்வான ஒரு இளை ஞன், அவள் மீது பீர் பாட்டிலைப் பீய்ச்சி அடிக்க, நேயர் விருப்பம் போல் அவனுக் காக மீண்டும் மீண்டும் அதே காரியத்தை உற்சாகமாகச் செய்தாள் அவள்.


கல் தோன்றா மண் தோன்றாக் காலத்துக்கு முன்பு வந்து விட்டதுபோல் நமக்குத் தோன்றியது. நாகரீக உலகின் ஆதி வாசிகளாக மாறியிருந்த இளை ஞர்-இளைஞிகளை நினைத்தபோது வேதனையாக இருந்தது.


அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்தபோது, ""சார், இங்க புதுவை அரசியல் பிரபலங்களிலிருந்து தமிழக காவல்துறை அதிகாரிக
ள் வரை வந்து போறாங்க. இதை நடத்தறது ஒரு ஃபாரின் நிறுவனம். இங்க எல்லோரை யும் ஆபாசக் கூத்தடிக்க வைக்கிறாங்க. அதை அவங்களுக்குத் தெரியாம பட மும் எடுத்துக்கறாங்க. இதில் உச்சகட்ட கொடுமை என்னன்னா கல்யாணமான தம்பதிகளே நிறைய வந்து தங்கள் ஜோடிகளை ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்திக்கிறதுதான். அதுமட்டுமல்ல...

ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற, வேலை பார்க்கிற இளைஞிகளை நட்பு வட்டத்திற்குள் கொண்டுவந்து போதை சமாச்சாரங்களுக்குப் பழக்கி, இதுபோன்ற இடங்களுக்கு சிலர் கொண்டுவந்துடறாங்க. பாவம் அதுங்க நமக்கு என்ன நடக்குது? நாம என்ன பண்றோம்ன்னு கூட தெரிஞ்சிக்காம போதையில் தாறுமாறா நடக்குதுங்க. அதேபோல் இங்கவரும் பெரும்பாலோர் மேல்நாட்டு நாகரிகம் என்ற போதையில் தாங்களாகவே வந்து ஆட்டம்போடறாங்க. ஒட்டுமொத் தத்தில் இது சிவப்பு விளக்குப் பகுதிகளை விட மோசமான மன்மத உலகம்''’என்றார் ஆதங்கமாய்.


அங்கு நடக்கும் கூத்துகளை நாம் படமெடுத்த போது சிலர், ’எப்படி வேணுன்னாலும் படம் எடுத்துக்கோ’ என்று மேனி அழகைக் காட்டி நின்றனர். சிலர், தங்கள் முகத்தை மட்டும் கொஞ்சம் மறைத்தனர். இன்னும் சிலர் திட்டினர்.


நள்ளிரவு 2 மணிவரை ஆபாசக் கூத்துகள் நீண்டது. நாம் அங்கிருந்து கிளம்பியபோது.. உடையே இல்லாமல் ஆண், பெண் ஜோடிகள், அப்படியே தங்கள் காரில் ஏறும் கண்றாவி களையும் காண நேர்ந்தது. தமிழக காவல்துறை, இந்த மன்மத உலகிற்கு ஸ்பெஷல் பர்மிட் கொடுத்திருக்கிறதோ என்னவோ?


-காசி

thanks nakkeran
 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…