12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பெரியார் கல்வி நிறுவனங்கள்!
100 விழுக்காடு வெற்றி!!
பெரியார் கல்வி நிறுவனங்கள்!
100 விழுக்காடு வெற்றி!!
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 100
விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம். இந்தச் சாதனையைப் படைக்க உழைத்த ஆசிரியப் பெருமக்களுக்கும்,
பெற்றோர், ஆசிரியர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய மாணவ, மாணவியருக்கும்
பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி - 100%
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி - 100%
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள்
மேல்நிலைப் பள்ளியிலிருந்து தேர்வுக்குச் சென்ற 213 மாணவியரும் தேர்ச்சி
பெற்றனர். இப்பள்ளி மாணவி செல்வி எஸ். செஹானாஸ் பானு 1200-க்கு 1179
மதிப்பெண் பெற்று இப்பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி - 100%
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு
மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து தேர்வுக்குச் சென்ற 75 மாணவர்களும்
தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவி டி. ஷைலா 1200க்கு 1143 மதிப்பெண்
பெற்று முதலிடத்தையும், மாணவி ஏ.ஜி.டி. அல்மாஸ் 1133 மதிப்பெண்கள் பெற்று
இரண்டாம் இடத்தையும், மாணவர் என். பிரபஞ்சன் 1095 மதிப்பெண் பெற்று
மூன்றாமிடத்தினையும் பள்ளியில் பெற்றுள்ளனர்.
பெரியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் - 100%
ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரி குலேஷன்
மேல் நிலைப் பள்ளியில் இருந்து தேர்வுக்குச் சென்ற 30 மாணவர்களும் தேர்ச்சி
பெற்றனர். இப்பள்ளி மாணவி எ. அர்ச்சனா 1200க்கு 1124 மதிப்பெண் பெற்று
பள்ளியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக