கான்பூர்: ஐஐடி கான்பூரில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த மாணவன் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐஐடி பிடிக்காததால் தான் தற்கொலை செய்து கொள்வதாக எழதி வைத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னௌஜைச் சேர்ந்தவர் மெஹ்தாப் அகமது(19). அவர் ஐஐடி கான்பூரில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் க்ல்லூரிக்குச் செல்லவில்லை. உடனே அவரது நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்த்தபோது அவர் தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறி்தது விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். ஐஐடி பிடிக்கவில்லை என்றும் அதனால் தான் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
எது அவரை இந்த முடிவு எடுக்கத் தூண்டியது என்று தெரிவியவில்லை. ஒரு வேலை ராகிங் கொடுமையாக இருக்குமோ என்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை என்று கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரிக்க கல்லூரி நிர்வாகம் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. அந்த குழு இந்த வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்கவிருக்கிறது. அகமதின் தற்கொலை பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஐஐடி கான்பூரில் 2 மாணவிகள், 6 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 5 பேர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் கல்லூரிக் கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து இறந்தார். இன்னொருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். மற்றொருவர் விஷம் குடித்து இறந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக