யாழ்.கோப்பாய் பகுதியில் வீடு ஒன்றில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த வீட்டின் உரிமையாளரை கத்தி முனையில் அச்சுறுத்திய கொள்ளையர் குழு தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான இலத்திரனியல் சாதனங்களை அபகரித்து சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது நேற்றிரவு 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு வீட்டில் உள்ள அறைகளுக்குள் இருந்த 80 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக அன்றைய தினமே கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் மக்கள் வீடுகளில் உறங்குவதற்கு அஞ்சுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த கொள்ளையர் குழுவினரை கைது செய்வது தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக