ரகளை செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரி மாற்றம்: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் செயலா? கலைஞர் கேள்வி
ரகளையில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நியாயமாக நடவடிக்கை எடுத்ததற்காக காவல்துறை அதிகாரியை ஒரே நாளில் மாற்றுவதுதான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் செயலா என்று திமுக தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலமே ஆகின்ற நிலையில், காவல்துறை விவகாரங்களில் ஆளுங்கட்சியினர் தலையிடும் சம்பவங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
சென்னையில் நள்ளிரவுக்கு மேல் ஓட்டலில் கூடி தகராறு செய்த அதிமுகவினரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, ஒரு அமைச்சரும் ஆளும்கட்சியின் சட்டமன்ற உறப்பினரும் காவல் நிலையத்திற்கே சென்று அவர்களை விடுவித்த சம்பவம் ஏடுகளில் வந்துள்ளன.
அதிமுகவினர் மீது நியாயமான நடவடிக்கை எடுத்த அந்த காவல்துறை அதிகாரியை ஒரே நாளில் மாற்றம் செய்ததுதான் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் செயலா?. இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக