தமிழக தனியார் கல்வி நிறுவனங்களும் அவற்றில் தமது பிள்ளைகளை படிப்பிக்கும் பணக்கார வர்க்கமும் சமசீர் கல்வியின் மிகப்பெரும் எதிரிகளாவர்.
குப்பன் சுப்பனின் பிள்ளைகளும் தமது பிள்ளைகளும் ஒரே விதமான படிப்பை படிப்பதா? பின் எமக்கு என்ன மரியாதை?
இக்கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஒரு புறம் எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று துடியாத் துடித்து அதில் இன்று பெருவெற்றி பெற்றும் விட்டனர். ஆனாலும் என்ன நீதிமன்றங்கள் சமசீர் கல்விக்கு ஆதரவான தீர்மானத்தை வழங்கி விட்டன.
பிரபல கல்வி நிறுவன முதலாளிகளான ரஜனி குடும்பமும் தெய்வங்களை எல்லாம் வேண்டி கலைஞர் அரசை வீழ்த்திவிட்டார்கள்.
ரஜனி ஜெயலலிதாவை பார்த்து தமிழகத்தை காப்பாற்றிவிட்டீர்கள் என்று கூறியது உண்மையில் தனது கல்வி நிறுவனங்களின் வருமானத்தை காப்பாற்றிவிட்டீர்கள் என்பதன் உட்பொருளே.
ரஜனி அண்ணே அவசரப்பட்டு விட்டீர்கள்.
தமிழகத்தில் அரிசியும் சத்துணவும் எப்படி நிரந்தரமாகி விட்டனவோ அப்படியே சமசீர் கல்வியும் தான் என்பதை வரலாறு உம்மைப்போன்ற பார்பனிய மேட்டுக்குடிகளுக்கு இனி சொல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக