தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசுடன் இணைவு? : அரியநேத்திரன் மறுப்பு>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, அண்மையில் கல்முனையில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் பேசிய, 18 ஆவது அரசியல் திருத்த வாக்களிப்பின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்குப் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
"மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் நல்ல குணமுடையவர் சி.யோகேஸ்வரன். அவரை அரசாங்கத்துடன் இணையுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசாங்கத்துடன் அவர் இணையும் பட்சத்தில் அவருக்கு இந்து கலாசார அமைச்சைப் பெற்றுக் கொடுப்பேன்" என உறுதியளித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன், அரசாங்கத்துடன் இணைவது எந்த வகையில் உண்மையென்று தெரியாவிட்டாலும் நெருப்பில்லாமல் புகையாது எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக