திங்கள், 20 செப்டம்பர், 2010

சஜித் பிரேமதாசவை தலைவராக நியமிக்க பல மாவட்டங்களில் ஆதரவு


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கோசம் வழுவடைந்து வருகிறது. இது தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி அமைப்புக்களின் 48 அங்கத்தவர்களில் 36 பேர் ஆதரவு தெரிவித்து தீர்மானமொன்று நிறைவேற்றியுள்ளனர். அதேபோல் காலி மாவட்டத்தைச் சேர்ந்த 57 அங்கத்தவர்களில் 44 பேரும் பொலன்னருவை மாவட்ட உள்ளுராட்சி அங்கத்தவர்களுள் 19 பேரில் 19 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்;பின்னரும் இது போல் இன்னும் பல மாவட்டங்களிலும் ஆதரவுகள் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை: