அவுஸ்திரேலியாவில் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ள இலங்கையர்களைச் சட்டவிரோதமாக படகில் கடத்திவந்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் 40 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பினை வழங்கியுள்ளதாக ஏ.பி. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.சிட்னி நகரில் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இலங்கையர்களைச் சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.அவுஸ்திரேலியாவுக்குக் கடந்த ஜூன் மாதம் 20 இலங்கையர்களை மலேசியாவிலிருந்து இவர் கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக