வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தலித்துகளுக்கு எதிரான போக்கை திமுக கடைப்பிடித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்

உத்தப்புரம் முதல் உமாசங்கர் வரையிலான விவகாரம்:
டி.கே.ரங்கராஜன் கவலை


தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான போக்கை திமுக கடைப்பிடித்து வருவதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது டி.கே.ரங்கராஜன்,  ‘’எல்காட் நிறுவன ஊழலை வெளிக்கொண்டு வந்தவரும், அரசு கேபிள் டிவியை தொடர்ந்து நடத்த முயற்சித்தவருமான
தலித் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை இடைநீக்கம் செய்தது நீதிக்கு புறம்பானது ’’என்றார்.
  மேலும்,  உத்தப்புரம் முதல் உமாசங்கர் வரையிலான விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது.

தலித்துகள் விவகாரத்தில் தொடர்ந்து தமிழக அரசு விரோத போக்கை கடைபிடித்து வருவது கவலை அளிக்கிறது’’ என்றும்  
தெரிவித்தார் டி.கே.ரங்கராஜன்.

கருத்துகள் இல்லை: